Uttarakhand Accident 6 Died (Photo Credit: @SachinGuptaUP X)

பிப்ரவரி 22, உத்தர்காஷி (Uttarakhand News): உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காஷி, மோரி பகுதியை சேர்ந்தவர் ராஜ்பால். இவரின் மனுவை ஜெஷீலா. தற்போது இவர் கர்ப்பமாக இருக்கிறார். இதற்காக மருத்துவ சிகிச்சைகளை பெற்று வருகிறார். உள்ளூர் மருத்துவமனையில் அவரை மருத்துவர்கள் அல்ட்ராசவுண்ட் பரிசோதனை செய்ய அறிவுறுத்தி இருக்கின்றனர். இவர்கள் வசித்து வரும் பகுதிக்கு அருகே இருக்கும் மருத்துவமனையில் அதற்கான வசதிகள் இல்லை என்பதால், மோரியில் இருந்து சுமார் 175 கி.மீ தூரத்தில் உள்ள டெஹ்ராடூனுக்கு பயணித்து பரிசோதனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, குடும்பத்தினர் கார் ஒன்றில் டெஹ்ராடூனுக்கு புறப்பட்டு இருக்கின்றனர். Pudukkottai Accident: சாலையோர பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து 5 வயது சிறுமி, இளைஞர் உயிரிழப்பு; சோகத்தில் குடும்பத்தினர்.! 

உருக்குலைந்த காரில் பயணித்த அனைவரும் பலி: இவர்கள் பயணித்த வாகனம் அங்குலல்ல டெஹ்ரி பகுதியில் சென்றபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கிவிட, காரில் பயணம் செய்த குடும்பத்தினர், கர்ப்பிணி பெண், கணவர் என 6 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களின் கார் விபத்தில் சிக்கியது மறுநாள் தெரியவர, அதிகாரிகள் 24 மணிநேர போராட்டத்திற்கு பின் அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Uttarkashi Accident (Photo Credit: @SachinGuptaUP X)

உட்கட்டமைப்பு பிரச்சனையால் நடந்த சோகம்: தம்பதிகள் வசித்து வந்த மோரி மாவட்டத்தில் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடுகள் இல்லாததன் காரணமாக, அவர்கள் 175 கி.மீ தூரம் மலைப்பாதையில் தொடர்ந்து பயணித்து மருத்துவமனைக்கு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பயணத்தை துணிச்சலாக முடிவெடுத்தாலும், வழியில் அவர்களுக்கு நேர்ந்த சோகம் பலரையும் வருந்த வைத்துள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் இவர்களின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.