ஆகஸ்ட் 13, உத்திரபிரதேசம் (Uttar Pradesh News): உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பலராம்பூர் மாவட்டம் கொத்வாலி திஹாத் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். 21 வயதுடைய இளம்பெண் காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத்திறன் கொண்டவர் ஆவார். சம்பவத்தன்று இவர் தனது மாமா வீட்டுக்கு சென்றுள்ளார். பின் கடந்த திங்கட்கிழமை இரவு 7 மணியளவில் தனது வீட்டுக்கு செல்வதாக கூறி புறப்பட்டுள்ளார். அப்போது இளம்பெண் தனியாக செல்வதை கண்ட நபர்கள் லிஃப்ட் தருவதாக கூறி இருக்கின்றனர். மகனுக்கு ஆண்மை குறைவு.. வாரிசுக்காக மருமகளை நாத்தனாரின் கணவருடன் சேர்ந்து மாறிமாறி வன்கொடுமை செய்த மாமனார்.!
இருசக்கர வாகனங்களில் பெண்ணை துரத்திய கும்பல்:
விபரீதத்தை புரிந்த பெண்மணி வேண்டாம் என மறுத்த நிலையில், 5 இருசக்கர வாகனங்களில் கும்பல் அவரை துரத்தி இருக்கிறது. பயந்து போன இளம்பெண் தெருவில் ஓடிய நிலையில், மாவட்ட எஸ்.பி.யின் வீட்டை கடந்தும் சென்றுள்ளார். பின் ஒதுக்குப்புறமான இடத்தில் பெண் தனியாக இருப்பதை அறிந்துகொண்ட கும்பல் அவரை வயல்வெளிக்கு தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக பெண்மணியின் பெற்றோர் புகார் அளித்த நிலையில், இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பெண்ணை இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் துரத்தி செல்லும் அதிர்ச்சி வீடியோ காட்சிகள் வெளியாகி பதறவைத்துள்ளன.
பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய துரத்தும் பதறவைக்கும் வீடியோ:
उत्तर प्रदेश –
जिला बलरामपुर में 21 साल की मूकबधिर (गूंगी) लड़की से गैंगरेप हुआ। CCTV में लड़की भाग रही है और दरिंदे बाइक से पीछा कर रहे हैं।
देर रात पुलिस मुठभेड़ में 2 आरोपियों अंकुर वर्मा और हर्षित पांडेय को टांग में गोली लगी है !! pic.twitter.com/Q2ZPRKBNGd
— Sachin Gupta (@SachinGuptaUP) August 13, 2025