Vijayawada International Airport (Photo Credit: Wikipedia)

மார்ச் 30, விஜயவாடா (Andra Pradesh): ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள விஜயவாடா விமான நிலையத்தில் இருந்து, கடந்த புதன்கிழமை காலை குவைத்துக்கு விமானம் புறப்பட இருந்துள்ளது. இந்த விமானம் சில பணிகளின் காரணமாக காலை 9 மணிக்கு புறப்படாமல் 4 மணிநேரம் தாமதமாக புறப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான தகவல் விமானத்தில் பயணம் செய்வோருக்கும் தெரியப்படுத்தப்பட்ட நிலையில், பின்னர் விமானம் குறித்த நேரத்தில் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குளறுபடியான தகவலை பயணிகள் அனைவருக்கும் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயணிகளில் 15 பேர் தனியார் டிராவல்ஸ் ஏஜென்சி மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்திருந்த நிலையில், அவர்களுக்கு முதல் தகவல் தெரிவிக்கப்பட்டு, மறுதகவல் தெரிவிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் விமானம் தாமதமாக புறப்படும் என்ற எண்ணத்தில் விமான நிலையம் வந்துள்ளனர். Pak Govt Twitter Withheld: பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் பக்கத்தை முடக்கியது மத்திய அரசு.! அதிரடி நடவடிக்கை..!

அவர்கள் புறப்படவேண்டிய விமானம் முன்னதாகவே புறப்பட்டு சென்றுவிட்டதாக அதிகாரிகள் கூற, தாமதமாகத்தான் அவர்களுக்கு விஷயம் புரியவந்துள்ளது. இதனையடுத்து, 15 பேரும் அடுத்த வாரம் விமானத்தில் குவைத் செல்ல அனுமதிக்கப்பட்டு பயணசீட்டு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த தகவலை விஜயவாடா விமான நிலைய இயக்குனர் லட்சுமிகாந்த் ரெட்டி உறுதி செய்துள்ளார். மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற எதிர்பாராத திருப்பங்கள் பயணிகளுக்கு ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.