மார்ச் 30, புதுடெல்லி: மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சார்பில் இந்தியா மற்றும் இந்திய அரசு குறித்து உலக அரங்கிலும், இந்திய அளவிலும் தவறான அல்லது உண்மையற்ற தகவலை பரப்பும் சமூக ஊடக பயனர்களை கண்காணித்து, அவர்களின் பக்கங்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்குள் ஆயிரத்திற்கும் அதிகமான பக்கங்கள் இந்திய அரசினால் முடக்கப்பட்டது.
பாகிஸ்தானை பொறுத்தமட்டில் அந்நாட்டு அரசியல்வாதிகள் மட்டுமல்லாது, அவர்களின் அதிகாரத்தின் கீழ் செயல்படும் ட்விட்டர் உட்பட சமூக பக்கத்திலும் இந்தியாவை தவறாக சித்தரிக்கும் அவதூறு கருத்துக்கள் பதிவு செய்யப்படுவது தொடருகிறது. அதற்கு அவ்வப்போது கண்டனம் தெரிவித்து வந்த மத்திய அரசு, ஒருகட்டத்திற்கு மேல் போலியான தகவலை பகிரும் யூடியூப் மற்றும் ட்விட்டர் கணக்குகளை முடக்கியது. IPL 2023: ஐ.பி.எல் போட்டியை தொகுத்து வழங்க ஸ்டார் ஸ்போர்ட்ஸுடன் இணைந்த ரவி சாஸ்திரி.!
இந்த நிலையில், பாகிஸ்தான் நாட்டு அரசின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம் இந்தியாவுக்குள் 3-வது முறையாக முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் போலியான தகவலை பரப்பியதாக அதன் ட்விட்டர் கணக்கை இந்திய மக்கள் அணுகாத வகையில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் முடக்கி இருக்கிறது.