மே 10, சிவகாசி (Virudhunagar News): விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் அங்குள்ள மக்கள் (Fireworks Factory Explodes In Tamilnadu) ஜப்பானியர்களை போல சுறுசுறுப்புடன் பட்டாசு வெடிபொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டு, உலகளவில் அதனை ஏற்றுமதி செய்து மாநிலத்திற்கும், தேசத்திற்கும் வருவாய்க்கு காரணமாக இருக்கின்றனர். இத்துணை பெருமை கொண்ட சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் பட்டாசு தொழிற்சாலைகள் அவ்வப்போது வெடித்து சிதறி மனித உயிரிழப்புகள் தொடரும் சோகமும் நடக்கிறது. உலகளவில் தனது தயாரிப்புகளை ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலைகள், அலட்சியம், நிர்வாக பிரச்சனை, முதலீடு செய்வதில் தயக்கம் உட்பட தனது பல பிரச்சனைகளை கருத்தில் கொண்டு உலகளாவிய தரத்திற்கு இணையாக தனது பட்டாசு தொழிற்சாலையை தரம் உயர்த்தாமல் குடிசைத்தொழில் போல செய்வதே அதற்கு முக்கிய காரணமாகவும் அமைகிறது. பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடித்த சில தொழிற்சாலைகளில் உராய்வு காரணமாகவும் வெடி விபத்து நடக்கிறது. இதனை குறைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

உராய்வு காரணமாக பயங்கர வெடிவிபத்து: இந்நிலையில், நேற்று சிவகாசி, திருத்தங்கள் ஸ்டாண்டர்ட் காலனியில் வசித்து வரும் நபர் சுந்தர்ராஜ். இவரின் மகன் சரவணன் (வயது 55). இவருக்கு சொந்தமாக செங்கமலபட்டி பகுதியில் நாக்பூர் மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையின் உரிமம் பெற்ற பட்டாசு ஆலை சுதர்சன் பயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இருக்கும் 20 அறைகளில் 80 க்கும் அதிகமான தொழிலாளர்கள் தினமும் பட்டாசு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று (மே 9) பட்டாசு ஆலையில் வழக்கம்போல தொழிலாளர்கள் வேலைபார்த்துக்கொண்ட இருந்த அதே வேளையில், நண்பகல் 2 மணிக்கு மேல் திடீரென உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. Nurses Day Quotes in Tamil: "செவிலியர் செய்வது தொழிலல்ல தொண்டு.." செவிலியர் தின வாழ்த்து கவிதைகள்..!

10 பேர் பலி, 11 பேர் படுகாயம்: இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு படையினர், தீயை அணைக்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர். இவ்விபத்தில் 7 அறைகள் முற்றிலுமாக தரைமட்டமான நிலையில், பிற 7 அறைகள் சேதம் அடைந்தன. இவ்விபத்தில் 6 பெண்கள் உட்பட 9 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தவாறு சடலமாக மீட்கப்பட்டனர். ஒரு தொழிலாளியின் உடல் மட்டும் ஆலையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் மீட்கப்பட்டது. காயமடைந்து உயிருக்கு போராடிய 11 தொழிலாளர்கள் காவல் துறையினரால் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையிலும், 3 பேர் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதனிடையே, வெடிவிபத்து ஏற்பட்ட அறைகளில் இருந்து புகை தொடர்ந்து வெளியேறியதால் இரவு 9 மணியளவில் நீண்ட நேர போராட்டம் மற்றும் மீட்பு பணிகளுக்கு பின் அழகர்சாமி என்ற தொழிலாளியின் உடலும் மீட்கப்பட்டது.

உயிரிழந்தவர்களின் விபரம் பின்வருமாறு: தமிழகத்தையே மீண்டும் சோகமாக்கிய இவ்விபத்தில் மத்தியசேனை பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் மகன் ரமேஷ் (31), அதே பகுதியை சேர்ந்த கீதாரி என்பவரின் மகன் அழகர்சாமி, சந்தரவீரன் என்பவரின் மனைவி வீரலட்சுமி (48), வி. சொக்கலிங்கபுரம் பகுதியை சேர்ந்த குருசாமி என்பவரின் மகன் காளீஸ்வரன் (47), சிவகாசியை சேர்ந்த மச்சக்காளை என்பவரின் மனைவி முத்து (52), இந்திரா நகர் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரின் மனைவி பேச்சியம்மாள் என்ற ஜெயலட்சுமி (22), லட்சுமி (43), விஜயகுமார் (30) என 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் அய்யம்பட்டி கிராமத்தை சேர்ட்டை முத்து, பேச்சியம்மாள் ஆகியோர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். காயமடைந்த 15 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 49th Chitrai Festival at Sri Muthumariamman Temple: ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் 49ம் ஆண்டு சித்திரை திருவிழா.. பார்வதி - பரமேஸ்வரனின் திருக்கல்யாண வைபவம்..!

4 பேரின் மீது வழக்குப்பதிவு, தலைமறைவானவர்களுக்கு வலைவீச்சு: இந்த விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா நேரில் மீட்பு பணிகளை ஆய்வு செய்தார். மேலும், மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருவோரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த வெடி விபத்து தொடர்பாக சரவணன், நிறுவனத்தின் மேலாளர் மற்றும் போர்மேன் ஆகியோர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆலை விதிமுறைகளை மீறி ஒப்பந்ததாரர் செயல்பட்டதே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையும் உறுதி செய்துள்ளதால் குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், விதியை மீறும் பிற பட்டாசு நிறுவனங்களின் மீது வழக்குப்பதிவுஸ் எய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த விவகாரத்தில் சிவகாசி கிழக்கு காவல்துறையினர் பட்டாசு ஆலை உரிமையாளர் சரவணன், மேலாளர், போர்மேன், ஆலையை ஒப்பந்தத்துக்கு எடுத்து நடத்தி வந்த முத்துகிருஷ்ணன் ஆகிய 4 பேரின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi Regret on Sivakasi Fireworks Explodes) இரங்கல்: இவ்விபத்து குறித்து தகவல் அறிந்த தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்து, காயமடைந்தோர் விரைந்து உடல்நலம் தேரர் பிரார்த்திப்பதாகவும் கூறினார். மேலும், அரசின் நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதிபெற்று அறிவிக்கப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழில் தனது இரங்கலை பதிவிட்டார். அந்த இரங்கல் பதிவில், "சிவகாசியில் ஒரு தொழிற்சாலையில் விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளை அறிந்து வேதனை அடைந்தேன். என் எண்ணங்கள் யாவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என தெரிவித்தார்.