Heart Attack (Photo Credit: Pixabay)

மார்ச் 25, கொல்கத்தா (West Bengal News): மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள கொல்கத்தா, தோப்ஸியா (Topsia Sub Inspector Dies by Heart Attack) காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் அனிமேஷ் பாலா (வயது 42). இவர் நேற்று இரவு தனது பணியில் வழக்கமாக ஈடுபட்டுக்கொண்டு இருந்தார். அச்சமயம், இரவு உணவையும் எடுத்ததாக தெரியவருகிறது. அப்போது, சற்றும் எதிர்பாராத விதமாக திடீரென அனிமேஷ் பாலா மூர்ச்சையாகி மயங்கி விழுந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக காவலர்கள், அவரை மீட்டு எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். Bharat BioTech Resumes Tuberculosis Vaccine Trial for Adults: காசநோயா? இனி கவலை வேண்டாம்.. தடுப்பூசியை செலுத்தி சோதனையை தொடங்கிய பாரத் பயோடெக்..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! 

2009ல் பணிக்கு சேர்ந்தவர்: அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அனிமேஷ் பாலா மாரடைப்பால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. காவல் உதவி ஆய்வாளர் சாப்பிடும்போது மரணம் ஏற்பட்டது சக காவலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மறைந்த அனிமேஷ் பாலா ரௌடிகளை ஒடுக்கும் பிரிவில் தீவிரமாக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2009ம் ஆண்டு பணியில் சேர்ந்த அனிமேஷ் பாலா, தோப்ஸியா காவல் நிலையத்தில் பணியாற்றுவதற்கு முன் போஸ்டா மற்றும் ஜுரபாகன் காவல் நிலையங்களில் பணியாற்றி இருக்கிறார். இவரின் மறைவு அங்குள்ள காவல்துறை வட்டாரங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 22 Aged Girl Raped by Uncle: காதல் மனைவியின் தங்கை பலாத்காரம்; அந்தரங்க வீடியோ எடுத்து மிரட்டிய மாமா.. சேலத்தில் பதறவைக்கும் சம்பவம்.! 

அதிகரிக்கும் மாரடைப்பு மரணங்கள்: இந்தியாவை பொறுத்தமட்டில் கொரோனாவுக்கு பின்னர் மாரடைப்பால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து இருக்கின்றன. இளம் வயதுள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மாரடைப்பால் பலியாகி வருகின்றனர். பொது சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தும் மாரடைப்பில் இருந்து தப்பிக்க, உடற்பயிற்சி செய்வது, உடலுக்கு சத்தான உணவுகளை சாப்பிடுவது, துரித மற்றும் எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒருமுறை முழு உடற்பரிசோதனை செய்வது, உடல்நலனில் உள்ள குறைகளை கண்டறிய உதவும்.