
ஜூன் 24, பாட்னா (Bihar News): பீகார் மாநிலம், ரோஹ்தாஸ் (Rohtas) மாவட்டத்தை சேர்ந்த தம்பதி அஷ்ரப் - ரேஷ்மா. இவர்கள் இருவரும் தனது குழந்தைகளுடன் வசித்து வந்தனர். இந்நிலையில், மனைவி ரேஷ்மா கடந்த 8 ஆண்டுகளாக முகமது இஷ்தேகர் என்ற நபருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதனையறிந்த அவரது கணவர் அஷ்ரப் தனது மனைவியை கண்டித்துள்ளார். ஆனால், ரேஷ்மா அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளார். Trending Video: போட்டாபோட்டி ரேசிங்கில் தனியார் பேருந்து.. திண்டுக்கல் - மதுரை வழித்தடத்தில் அடாவடி.!
கணவர் கொலை:
இதனையடுத்து, ரேஷ்மா தனது காதலன் இஷ்தேகர் மற்றும் அவரது நண்பருடன் சேர்ந்து, தனது கணவரைக் கொலை செய்ய திட்டமிட்டார். இரவில் மூவரும் சேர்ந்து அஷ்ரப்பை கழுத்தை நெரித்து (Murder) கொன்றனர். இதனைப் பார்த்த அவரது குழந்தைகள், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணை:
இதன்பின்னர், அவரது மனைவி ரேஷ்மா மற்றும் அவரது காதலன் இஷ்தேகர் ஹசனை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவரது நண்பர் ஜாம்ஷெட்டை வலைவீசி தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட ரேஷ்மா மற்றும் அவரது காதலனிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.