Death File Pic (Photo Credit : Pixabay)

ஜூன் 17, நவிமும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நவிமும்பை, ஐரோலி செக்டர் 1 பகுதியில் வசித்து வரும் 22 வயது இளம்பெண் நந்தினி. இவர் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூரை (Kanpur) பூர்வீகமாகக் கொண்டவர் ஆவார். பன்னிரண்டாம் வகுப்பு வரை பயின்றுள்ள நந்தினி திவாரி தனது குடும்ப சூழ்நிலை காரணமாக மும்பைக்கு இடம்பெயர்ந்துள்ளார்.

பெற்றோருக்கு பணம் அனுப்ப முடியாமல் திணறல் :

இவர் அங்கு தனியார் ஐடி நிறுவனம் (Private IT Firm) ஒன்றில் ரூ.12000 சம்பளத்துக்கு வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக வேலை பார்த்து வந்த பெண்மணி, வாங்கிய சம்பளத்தில் வீட்டு வாடகை, பிற செலவுகள் போன்றவை போக பெற்றோருக்கு பணம் அனுப்ப இயலாமல் (Low Salary) திணறி இருக்கிறார். வழுக்கை தலையில் முடி வளரும்.. மக்களுக்கு ஒரிஜினல் மொட்டை போட்ட கும்பல்.!

முன்னேற ஏங்கிய பெண்மணி :

மேலும் தனது நிலை குறித்து நண்பர்களிடமும் பலமுறை வருந்தினாலும் எப்படியாவது முன்னேறி விட வேண்டும் என்று கூறிவந்துள்ளார். தங்கும் விடுதியில் மூன்று பெண்களுடன் தங்கியிருந்த நந்தினி திவாரி சம்பவத்தன்று தனியாக இருந்தார். அவருடன் இருந்த நபர்கள் சொந்த ஊருக்கு விடுமுறைக்காக சென்றுள்ளனர்.

தூக்கிட்டு தற்கொலை செய்த சோகம் :

இதனிடையே விடுதியில் தனியாக இருந்தவர் தூக்கிட்டு தற்கொலை (Suicide Death) செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நந்தினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகையில், நந்தினி பொருளாதார ரீதியாக பிரச்சனையை எதிர் கொண்டு வந்ததும், அவர் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்ததால் பல கஷ்டங்களை அனுபவித்து வந்ததும் தெரியவந்துள்ளது.

அக்கம்பக்கத்தினர் மனவேதனை :

அக்கம்பக்கத்தினருடன் அன்புடன் பேசும் பழக்கம் கொண்ட பெண்மணி, இவ்வாறான சூழ்நிலையில் தற்கொலை செய்து கொண்டதை தங்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை என அங்கிருந்தவர்களும் கூறி இருக்கின்றனர்.