Husband Murder Case (Photo Credit: @TrueStoryUP X)

செப்டம்பர் 15, லக்னோ (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் நிச்லாவ்ல் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் நாகேஷ்வர் ரௌனியார். இவர், அப்பகுதியில் கடை நடத்தி வந்துள்ளார். இவரது கடையில் வேலை பார்த்து வந்த ஜிதேந்திரா என்பவருக்கும், மனைவி நேஹா ரௌனியார் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்பினர். இதற்கு, தடையாக இருந்த தனது கணவர் நாகேஷ்வரை கொலை செய்ய திட்டமிட்டனர். உல்லாசத்துக்கு தடையாக இருந்த 2 வயது குழந்தை அடித்துக்கொலை.. சாக்கு மூட்டையோடு புதைத்த கொடூர தாய்.!

கணவர் கொலை:

இதனையடுத்து, நாகேஷ்வரை ஒரு வாடகை வீட்டிற்கு அழைத்து சென்று, மது அருந்த வைத்து, பின்னர் அவரது கால்கள் கட்டப்பட்டு, கழுத்தை நெரித்து கொலை (Murder) செய்தனர். இதன்பின்னர், உடலை ஒரு பைக்கில் ஏற்றி 25 கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்றனர். இதனை ஒரு சாலை விபத்து போல இருக்க வேண்டுமென்று இவ்வாறு செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, குற்றம் சாட்டப்பட்ட மனைவி நேஹா மற்றும் காதலர் ஜிதேந்திரா ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.