Wife Kills Husband in Bihar (Photo Credit: @TrueStoryUP X)

மே 28, கயா (Bihar News): பீகார் மாநிலம், கயா (Gaya) மாவட்டத்தை சேர்ந்தவர் மந்து யாதவ் (வயது 25). இவர், கடந்த 2022ஆம் ஆண்டு லக்கியா தேவி (வயது 22) என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு, லக்கியா தேவி தனது மாமியார் வீட்டிற்கு செல்ல விரும்பவில்லை. அவர், தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். ஒரு மாதத்திற்கு முன்பு, தனது கணவரின் வற்புறுத்தலின் பேரில், தனது மாமியார் வீட்டிற்கு வந்தார். இதனால், கணவன் - மனைவி இடையே இடையே தகராறு ஏற்பட்டது. பழங்குடியின வாலிபரை அரை நிர்வாணமாக்கி, மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்குதல்.. கொடூர சம்பவம்..!

கணவர் கொலை:

இந்நிலையில், லக்கியா தேவி தனது கணவருக்கு விஷம் (Poison) கலந்த தர்பூசணியை சாப்பிட கொடுத்துள்ளார். சாப்பிட்ட சற்று நேரத்தில், அவர் கீழே மயங்கி விழுந்தார். உடனே, அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இருப்பினும், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின்பேரில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவரது மனைவி தர்பூசணியில் விஷம் கலந்து கொடுத்து கொன்றது (Murder) தெரியவந்தது. இதனையடுத்து, காவல்துறையினர் லக்கியா தேவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.