Gun Fire (Photo Credit: Pixabay)

ஜனவரி 22, பவானா (Delhi News): தலைநகர் டெல்லியில் புறநகர் பகுதியில் ரோகிணி செக்டார் 3யில் உள்ள அரசு மதுபானக் கடையில் தரம்வீர் (வயது 54) பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் (ஜனவரி 20) பணி முடிந்து இரவு காரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவரை வழிமறித்த மர்மநபர், துப்பாக்கியால் சுட்டுவிட்டு (Murder) அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். Woman Gang Rape: தமிழக பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்; அத்துமீறிய இருவர் கைது..!

துப்பாக்கியால் சுட்டுக் கொலை:

இதில், படுகாயமடைந்த அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயரிழந்தார். இச்சம்பவம் குறித்து அவரது மகன், காவல்நிலையத்தில் புகார் அளித்தார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் முதற்கட்ட விசாரணையில், சொத்துத் தகராறில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.