Sleeping | Stress (Photo Credit: Pixabay)

ஜூன் 04, சென்னை (Health Tips Tamil): இன்றளவில் பலரும் தூக்கமின்மை பிரச்சனையால் கடுமையான மன அழுத்தம் உட்பட பிற உடல்நல பிரச்சனைகளையும் எதிர்கொள்கின்றனர். தூக்கம் வராமல் பாதியில் எழுந்திருப்பதும், தூங்க எவ்வளவு நேரம் முயற்சித்தாலும் முடியவில்லை என்றும், எவ்வளவு தூங்கினாலும் எனது தூக்கம் போதவில்லை என்றும் பலர் ஏக்கத்துடன் தவித்து வருகின்றனர். நிம்மதியாக உறங்க என்னதான் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கும் பலருக்கும் இந்த நான்கு பழங்கள் நல்ல பலனை கொடுக்கும்.

கிவி பழம் :

உறங்குவதற்கு முன்பு கிவி பழம் சாப்பிடுவது உடலில் ஆக்சிஜனேற்றத்தை அதிகரிக்கும். இது செரோடோனின் என்ற ஹார்மோனை கொண்டுள்ளதால் தூக்க விழிப்பு சுழற்சியானது நிர்வகிக்கப்படும். இதனால் நல்ல உறக்கம் உடலுக்கு கிடைக்கும். உறங்கும் ஒரு மணி நேரத்திற்கு முன் கிவி பழம் சாப்பிட்டால் உடல் ஓய்வெடுக்கவும், எளிமையான தூக்கத்துக்கும் வழி வகுக்கும்.

அன்னாசிப்பழம் :

அன்னாசி பழத்தில் இருக்கும் மெலடோனின் தூக்கம் மற்றும் விழிப்பு ஆகியவற்றின் சுழற்சியை நிர்வகிக்கும் தன்மை கொண்டது. இது தூங்குவதற்கான நேரத்தை குறைத்து ஆழ்ந்த தூக்கத்தை மேம்படுத்தும்.

வாழைப்பழம் :

ஆழ்ந்த உறக்கத்திற்கு மிகப்பெரிய உதவியை செய்யும் வாழைப்பழத்தில் பொட்டாசியம், மெக்னீசியம் உள்ளது. இது தூக்கத்தை தூண்டக் கூடியது. ஹார்மோன் சுரப்புக்கும் வழிவகைச் செய்யும்,

ஆப்பிள் :

ஆப்பிளில் இருக்கும் மெலடோனின் ஹார்மோன் மெக்னீசியம் தாது கொண்டதாகும். நரம்பு மற்றும் தசைகளை தளர்வடையச் செய்து உறக்கத்தை இது மேம்படுத்தும். படுக்கைக்கு முன் ஆப்பிள் சாப்பிட்டால் நல்ல உறக்கம் கிடைக்கும். இரவு நேரத்தில் உறங்கும் முன் நல்ல குளியலுடன் ஆப்பிள் சாப்பிட்டு படுத்தால் உறக்கம் கண்ணைக் கட்டும்.