அக்டோபர் 30, சென்னை (Kitchen Tips): பொதுவாகவே முருங்கைக் கீரையில் பொரியல், கூட்டு செஞ்சு சாப்பிட்டுருப்போம். அந்தவகையில், சற்று வித்தியாசமாக முருங்கைக்கீரை வைத்து தொக்கு (Murungai Keerai Thokku Recipe) எப்படி செய்வது என்பதை இதில் தெரிந்து கொள்வோம். இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். முருங்கைக் கீரையில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் அடங்கியுள்ளன. மேலும், இரும்புச்சத்து நிறைந்த முருங்கைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வருவது உடலுக்கு நல்லது. Soya Chukka: மட்டன் சுவையில் சோயா சுக்கா செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
தேவையான பொருட்கள்:
- முருங்கை கீரை - 3 கைப்பிடி அளவு
- காய்ந்த மிளகாய் - 12
- துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி
- உளுந்தம்பருப்பு - அரை கரண்டி
- மஞ்சள் தூள் - அரை கரண்டி
- வெந்தயம் - அரை கரண்டி
- சீரகம் - 1 கரண்டி
- கடுகு - 1 கரண்டி
- பெருங்காயம் - அரை கரண்டி
- பூண்டு - 10 பல்
- வெங்காயம் - 2
- தக்காளி - 1
- புளி - எலுமிச்சை அளவு
- கடலை எண்ணெய் - 4 தேக்கரண்டி
- நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி
- கருவேப்பிலை - 1 கொத்து
- உப்பு - தேவையான அளவு
முருங்கைக்கீரை தொக்கு செய்முறை:
- முதலில் முருங்கைக் கீரையை தண்ணீரில் நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.
- அடுத்து, குக்கரில் சுத்தம் செய்த முருங்கைக் கீரை, அதனுடன் துவரம் பருப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி 6 முதம் 7 விசில் வரும்வரை வேகவைக்கவும்.
- ஒரு கடாயில் கடலை எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், காய்ந்த மிளகாய், சீரகம், வெந்தயம், பூண்டு, வெங்காயம், தக்காளி, சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
- மேலும் மஞ்சள் தூள், தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர், இதை ஆற வைத்து அதில் புளி சேர்த்து, ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
- அடுத்து, தாளிக்க நல்லெண்ணெய் 4 தேக்கரண்டி ஊற்றி கடுகு, கருவேப்பிலை, உளுந்தம்பருப்பு, பெருங்காயம் சேர்த்து தாளித்து, ஏற்கனவே அரைத்து வைத்த தொக்கை இதனுடன் சேர்த்து நன்கு கிளறிவிடவும்.
- மேலும், அதன்மேலே நல்லெண்ணெய் 2 தேக்கரண்டி ஊற்றி மூடி போட்டு, சுமார் 5 நிமிடம் காத்திருக்கவும். இதனையடுத்து மூடியை திறந்து பார்த்தால் சத்தான முருங்கைக்கீரை தொக்கு தயார்.