Ayudha Puja in Navratri 2025 (Photo Credit : @Girikumaran9 X)

செப்டம்பர் 27, சென்னை (Festival News): நவராத்திரி பண்டிகையை தொடர்ந்து இந்துக்கள் கொண்டாடும் மிகப்பெரிய பண்டிகையாக சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை (Ayudha Puja 2025) நடைபெறுகின்றன. நவராத்திரி பூஜை ஒன்பது நாட்கள் நடைபெறும் போது, துர்க்கை அம்மனுக்கு மூன்று நாட்கள் பூஜை செய்யப்படுகிறது. அதன்பின் மூன்று நாட்களுக்கு லட்சுமி வழிபாடு நடக்கிறது. இறுதியாக மூன்றாவது கட்டத்தில் சரஸ்வதி தேவி வழிபாடு நடத்தப்படுகிறது. மனிதனுக்கு ஞானம், வீரம், செல்வம் ஆகிய மூன்றும் அவசியம் என்பதை உணர்த்துவதே ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி கொண்டாடுவதின் நோக்கமாகும். Ayudha Puja 2025: ஆயுத பூஜை எப்போது?.. சரஸ்வதி தேவியின் அருள் கிடைக்க பூஜை செய்ய உகந்த நேரம், வழிபாட்டு முறை.!

ஆயுத பூஜையின் முக்கியத்துவம் & சிறப்பு :

நவராத்திரியின் கடைசி மூன்று தினங்களில் சரஸ்வதி தேவியை வணங்கும் பொருட்டு அக்டோபர் 1ஆம் தேதியான நாளை மஹா நவமியில் சரஸ்வதி பூஜை & ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் அசுரனை அழிப்பதற்காக பெண் தெய்வங்களிடமிருந்து அன்னை ஆயுதங்களை பெற்று பூஜை செய்வார். அந்த ஆயுதங்கள் தான் மக்களை அசுரனிடம் இருந்து காப்பாற்ற அம்பிகை உபயோகப்படுத்தினார். இதன் காரணமாகவே நம் வாழ்வாதாரத்திற்கு உபயோகிக்கும் அனைத்து கருவிகளையும், ஆயுதங்களையும் பூஜை செய்யும் நாளாக ஆயுத பூஜை அமைந்துள்ளது. இதனை தொடர்ந்து அசுரனை அம்பிகை வதம் செய்து வெற்றிவாகை சூடியதை கொண்டாடும் விதமாக அடுத்த நாள் விஜயதசமி கொண்டாடப்படுகிறது.

ஆயுத பூஜை நவராத்திரியின் எத்தனையாவது நாளில் சிறப்பிக்கப்படுகிறது (Which day is Ayudha Puja in Navratri 2025)?

2025 ஆம் ஆண்டில் செப்டம்பர் 22ஆம் தேதி திங்கட்கிழமையன்று தொடங்கிய நவராத்திரி பண்டிகையானது அக்டோபர் 2 அன்று நிறைவடைகிறது. முதல் நாள் துர்கை பூஜையுடன் தொடங்கி ஒன்பது நாட்களிலும் ஒன்பது தேவிகளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இதனை தொடர்ந்து ஒன்பதாம் நாள் ஆயுத பூஜை & சரஸ்வதி பூஜை சிறப்பாக கொண்டாடப்படும். பத்தாம் நாள் விஜயதசமியானது அசுரனை வென்ற அம்பிகையை போற்றி கொண்டாடப்படுகிறது. இதனை தீமையை வென்ற நன்மையின் வெற்றிநாளாகவும் கருதலாம். Ayudha Puja Wishes 2025 Tamil: ஆயுத பூஜை 2025 சிறப்பு வாழ்த்துக்கள்.. தொழிலில் முன்னேற கொண்டாடுங்கள்.!

ஆயுத பூஜை செய்வதற்கான நல்ல நேரம் (Ayudha Puja Time) :

2025 ஆம் ஆண்டுக்கான ஆயுத பூஜை & சரஸ்வதி பூஜை (Ayudha Puja Date) அக்டோபர் மாதம் 01-ஆம் தேதி காலை 09:15 முதல் தொடங்கி 10:15 மணி வரை கொண்டாடப்படுகிறது. மாலை 4:45 மணி முதல் 05:45 மணிக்குள் பூஜை செய்ய நல்ல நேரமாகவும் கணிக்கப்பட்டுள்ளது. மாலை நேரத்தில் 06:00 மணிக்கு மேல் 07:30க்குள் பூஜை செய்யலாம். இந்த நேரங்கள் இறைவனை வணங்க சிறந்த நேரங்களாகவும் கருதப்படுகின்றன.