Annadanam (Photo Credit: @BalajiThangavel / @VijayadharaniM X)

மார்ச் 19, திட்டக்குடி (Spiritual Tips in Tamil): இந்து மதத்தின் நம்பிக்கைப்படி, தானத்தில் மிகச்சிறந்ததாகவும், மிகப்பெரிய வல்லமையை கொண்டதாகவும் இருப்பது அன்னதானம். மனிதனின் உயிரை ஒவ்வொரு நாளும் கையில் பிடித்து நகர்த்த உணவு அவசியம். ஒரு மனிதனுக்கு எந்த விஷயத்தில் தீங்கு செய்தாலும், அதற்கு தண்டனையோ, மன்னிப்போ உண்டு. ஆனால், ஏழையோ - பணக்காரனோ, உணவு விஷயத்தில் ஒரு உயிரை அலட்சியப்படுத்தினால், உணவு கொடுப்பது போல பாவித்து அவமரியாதை செய்தால், ஏழேழு ஜென்மம் எடுத்தாலும், அந்த விசயத்திற்கு கட்டாயம் நாம் அனுபவிக்கும் நிலை உண்டு என்கிறது சாஸ்திரங்கள்.

தலைமுறையை பாதுகாக்கும்:

அதனாலேயே கோவில் திருவிழாக்கள், முக்கிய நாட்களில் அன்னதானம் வழங்கப்படும். இன்றளவில் அன்னதானம் என்பது கோவில்களில் மட்டுமல்லாது, தனிநபர்களாலும் அவரவர் சூழ்நிலைக்கேற்ப வழங்கப்படுகிறது. எளியோரின் வயிற்றுபசிதீர்க்கும் அன்னதானம், அன்பு கொண்ட உள்ளங்களால் வழங்கப்படும் பட்சத்தில், அதனை பசியுடன் இருப்பவர் சாப்பிட்டு பாராட்டும் ஒருவார்த்தை நம் தலைமுறையை காக்கும் என்பது சன்னதோர் வாக்கு. Summer Tips: கொளுத்தும் வெயிலால் தவிக்கிறீங்களா? உடல் சூடு குறைய அருமையான மோர் கரைசல்.. செய்வது எப்படி?

அன்னதானம் செய்யும் உதவிகள்:

அந்த வகையில், இன்று நாம் அன்னதானம் இறைவனை சென்றடைவது எப்படி என்பது குறித்து உங்களுக்கு தெரியுமா?. இன்று அதுகுறித்து விரிவாக தெரிந்துகொள்ளலாம். அன்னதானத்தை யார் செய்தாலும், அவர்கள் இறைவனின் அனுகிரகத்தை எளிதில் அடையாளம். இதனால் நமது தீய கர்மப்பலன் கூட தூய்மைப்படுத்தப்படும். அதனாலேயே ஒருவரின் பசிதீர்க்கும் அன்னதானம் மிகப்பெரிய சக்தியை கொண்டதாக கருதப்படுகிறது. ஒருவரின் அகஅமைதி, ஆன்மீக வளர்ச்சிப்பாதைக்கு அன்னதானம் பேருதவி செய்கிறது. அன்னதான சேவை என்பது தியாகமாக மட்டுமல்லாது, இறைவனுக்கான பக்தி, எளியோருக்கான உணவு வழங்கும் குணநலனின் வெளிப்பாடாக அமைகிறது.

நல்லெண்ணத்தை ஊக்குவிக்கும்:

கோவில்களில் தெய்வத்தின் பெயரால் வழங்கப்படும் அன்னதானம், இறைவனின் அருள் கிடைக்க வழிவகை செய்யும். பசியுடன் இருக்கும் நபர்களின் மனதை குளிர்விக்கும் அன்னதானம், இறைவனின் மனதையும் குளிர்வித்து, அருளாக அன்னதானம் செய்வோருக்கு நன்மையை ஏற்படுத்தும். அன்னதானத்தில் கோவிலில் வழங்கப்படும் அன்னதானத்துக்கு தனிசிறப்பும் இருக்கிறது. பிறரின் பசியை போக்க முயற்சித்து செய்யும் செயல், தெய்வங்களாலும் கவனிக்கப்படும் என்பதால், அன்னதானம் சக்தி கொண்டது. மனிதர்களை போல பிற உயிரினங்களான எறும்பு, கால்நடைகள் போன்றவற்றுக்கும் உணவு தானம் செய்யலாம். கோவிலுக்கு வரும் பக்தர்கள், பாதயாத்திரை செல்லும் பக்தர்கள், கிரிவலம் வருவோருக்கு அன்னதானம் வழங்குவது நல்லது. மலைக்கோவில் இருக்கும் குரங்கு, பசு, யானை போன்றவற்றுக்கும் அன்னதானம் வழங்கலாம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றுப்படி, நல்லெண்ணத்துடன் தானம் செய்பவரே ஆன்மீக நிலையை அடைவார்கள் என்று கூறுவார். கோவிலின் சேவை பக்தியின் வடிவாக இருக்க வேண்டும். அதுவே முக்தியை தரும்.