Buttermilk (Photo Credit: Pixabay)

மார்ச் 18, சென்னை (Chennai News): இந்தியாவில் ஏப்ரல், மே மாதத்தின் தொடக்கத்துக்கு முன்பே வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. ஒவ்வொரு நாளும் வெளியில் சென்று பணியாற்றுவோர், வெயிலின் தாக்கத்தை தாங்க இயலாமல் வெள்ளரி, தர்பூசணி, அன்னாசி போன்ற பழங்களை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். கூழ் கடைகளிலும் பலரும் கூழ் அருந்தி வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கின்றனர். எலுமிச்சை சாறு, இளநீர், நுங்கு, பிற பழச்சாறுகள் என மீண்டும் இயற்கையின் பக்கம் மக்கள் திரும்பி இருக்கின்றனர். வடமாநிலங்களில் ஏற்கனவே வெயிலின் தாக்கம் அதிகரித்துவிட்ட நிலையில், நடப்பு ஆண்டின் கோடைகாலத்தில் வெப்பம் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி வரை அதிகரிக்கும் என ஏற்கனவே எச்சரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வழிவகை செய்யும் மோர் கரைசல் செய்வது எப்படி என இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள். கட்டியான தயிரில் இருந்து எடுக்கப்பட்டு தயாரிக்கப்படும் மோர் கரைசல், உடலுக்கு குளிர்ச்சியை வழங்கும். அதில் சேர்க்கப்படும் பொருட்கள், கோடையில் ஏற்படும் உடல் அலர்ஜி போன்ற விஷயங்களையும் தீர்க்க வழிவகை செய்யும். மோர் கரைசலை செய்ய, வீட்டிலேயே பால் வாங்கி உறை ஊற்றி தயிர் எடுத்து பயன்படுத்துங்கள். நகரத்தில் இருப்போருக்கு வேறு வழியில்லை என்பதால், நீங்கள் கடைகளில் விற்பனை செய்யப்படும் தயிர் பாக்கெட் வாங்கி பயன்படுத்திக்கொள்ளலாம். தினமும் சிக்கன் சாப்பிடுறீங்களா? எச்சரிக்கை.. மருத்துவர்கள் அறிவுரை இதோ.! 

மோர் கரைசல் செய்யத் தேவையான பொருட்கள்:

தயிர் - 150 கிராம்,

தண்ணீர் - 350 முதல் 450 மில்லி,

கறிவேப்பில்லை & கொத்தமல்லி தழை - சிறிதளவு,

இஞ்சி - இன்ச் அளவு,

பச்சை மிளகாய் - 2,

உப்பு - தேவையான அளவு,

பெருங்காயத்தூள் - சிறிதளவு,

மிளகு (பகுதியளவு பிடித்துக்கொள்ள வேண்டும்) - 4.

செய்முறை:

  • முதலில் எடுத்துக்கொண்ட பச்சை மிளகாய், கறிவேப்பில்லை, கொத்தமல்லி தழை, இஞ்சி ஆகியவற்றை தனித்தனியே நன்கு மைய இடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். Benefits of Cloves: கிராம்பில் உள்ள நன்மைகள் என்ன..? விவரம் உள்ளே..!
  • பின் பாத்திரத்தில் சிறிதளவு உப்பு, நுணுக்கிய மிளகு, பெருங்காயத்தூள், தயிர், தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து லேசாக கிளறி விட வேண்டும்.
  • இதனுடன் மேலே இடித்து எடுத்து வைத்துள்ள மிளகாய், கறிவேப்பில்லை, மல்லி, இஞ்சி ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ளவும்.
  • இந்த கரைசலை மத்து, தயிர் அடிக்க பயன்படுத்தும் கரண்டி போன்றவற்றில் ஏதேனும் ஒன்று கொண்டு தொடர்ந்து 5 முதல் 10 நிமிடங்களுக்கு நன்கு அடித்து எடுத்துக்கொள்ளவும்.
  • இப்போது உடல் சூடு கட்டுக்குள் கொண்டு வரும் மோர் கரைசல் தயார். நீங்கள் கடைகளில் அவ்வப்போது வாங்கி குடிக்கும் மோர் பாக்கெட்டை விட, இதன் சுவையும், நன்மை செய்யும் குணமும் பன்மடங்கு அதிகரிக்கும்.
  • தயிரை நாம் பெருக்கி குடிக்க, அது உடலுக்கு நன்மையை வழங்கும். அதில் சேர்க்கப்படும் இஞ்சி, கறிவேப்பில்லை, மிளகு, கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய் ஆகியவை உடலுக்கு உடனடி ஆற்றலை மோருடன் சேர்ந்து வழங்கும். புத்துணர்ச்சி கிடைக்கும்.