
மே 30, சென்னை (Health Tips): இயற்கையான முறையில் நம் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள பல வழிமுறைகள் உள்ளன. நம் உடலை குளிர்ச்சியாகவும், நீரேற்றுத்துடனும் வைப்பது மிகவும் அவசியம். அந்தவகையில், பாதாம் பிசின் (Badam Pisin) சிறந்த பயனை தரும். உடலை குளிர்விக்கவும் மற்றும் வெப்பத்திலிருந்தும் நிவாரணம் அளிக்க உதவும். இது, பாதாம் மரத்தின் பட்டையிலிருந்து கிடைக்கும் ஒரு இயற்கை பொருள் ஆகும். குளிர்ச்சி தன்மை கொண்டது. இதனால் உடலின் சூட்டை தணித்து உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. இதிலுள்ள நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். Menstruation: மாதவிடாய் சுகாதாரம்.. இதையெல்லாம் தப்பி தவறியும் செய்யாதீங்க.!
பாதாம் பிசின் ஆரோக்கிய பயன்கள்:
- பாதாம் பிசினில் கால்சியம், மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. மூட்டு தேய்மானம், மூட்டு வலி போன்ற பிரச்சனைகளை தடுக்கலாம்.
- இதில் இருக்கும் இயற்கையான குளிர்ச்சி பண்புகள் வயிற்றுப் புண் மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளை சரிசெய்கிறது. ஆரோக்கியமான செரிமானத்தை மேம்படுத்துகிறது.
- பாதாம் பிசினை ஊற வைத்தால், நீரை உறிஞ்சி ஜெல் போன்று மாறும். இதை சாப்பிட்டால் உடலை நீரேற்றமாக வைத்திருக்கலாம். மேலும், இதில் இருக்கும் புரதச்சத்துக்கள், தாதுக்கள் உடல் வளர்ச்சியை மேம்படுத்தும். உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும்.
- இதில் இருக்கும் குளிர்ச்சி மற்றும் நீரேற்ற பண்புகள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. கோடை வெப்பத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. மேலும், உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி, ரத்த ஓட்டத்தை சீராக்கி, இயற்கையான சரும பொலிவை அளிக்கிறது.