Ven Pongal (Photo Credit: @_Neerah X)

ஜனவரி 10, சென்னை (Cooking Tips): தென்னிந்திய உணவு வகையில் மிகவும் பிரபலமானது வெண்பொங்கல் (Ven Pongal). சமைக்க எளிதான வெண்பொங்கல் மிளகு, சீரகம், பாசிப்பருப்பு என உடல் உறுப்புகளுக்கு உட்புறத்தில் இருந்து நன்மையை செய்யும் பொருட்களை சேர்த்து தயாரிக்கப்படுவது ஆகும். பெரும்பாலான தென்னிந்திய வீடுகளில், சுழற்சி வெண்பொங்கல் காலை உணவாக பரிமாறப்படுகிறது. வெண்பொங்கலுக்கு உளுந்து வடை, சாம்பார், தேங்காய் சட்னி போன்றவை தொட்டுக்கொள்ள வழங்கப்படும். இன்று சுவையான பொங்கல் செய்வது எப்படி என தெரிந்துகொள்ளுங்கள். Pongal Special Recipes: வெண்பொங்கலுக்கு ஏற்ற பரங்கிக்காய் கூட்டு செய்வது எப்படி? அசத்தல் டிப்ஸ் உள்ளே.! 

வெண்பொங்கல் செய்யத் தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 3/4 கப்,

பாசிப்பருப்பு - 1/4 கப்,

நெய் - 1/4 கப்,

முந்திரி - 5,

மிளகு & சீரகம் - 2 ஸ்பூன்,

வரமிளகாய் - 1,

பச்சை மிளகாய் - 1,

இஞ்சி - இன்ச் அளவு,

கறிவேப்பில்லை - சிறிதளவு

செய்முறை:

  • பின் குக்கரில் சேர்த்து ஒரு கப் அளவுக்கு 2 கப் வீதம் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 5 முதல் 6 விசில் வரை காத்திருக்கவும். குக்கர் விசில் குறைந்ததும், சாதத்தை நன்கு மசித்து கிளறிவிட வேண்டும். Sakkarai Pongal Recipe: பொங்கல் பண்டிகைக்கு தித்திப்பான சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!

  • வாணெலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி முந்திரி, மிளகு, சீரகம், வரமிளகாய், நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் இறுதியாக கறிவேப்பில்லை ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து பொன்னிறமாக வந்ததும் சாதத்துடன் சேர்த்து கிளறினால் சுவையான வெண்பொங்கல் தயார்.
  • இறுதியாக கிளறும்போது சிறிதளவு நெய், கறிவேப்பிலையை 2 - 3 ஆக நறுக்கி சேர்த்து கிளறினால் சுவையும், மனமும் உடனே சாப்பிட வைக்கும்.
  • குக்கர் இல்லாதவர்கள் தனியாக சாதத்தை வடித்தும் இம்முறையை பின்பற்றி உணவு சமைக்கலாம். அதேபோல, முதலிலேயே தலைப்புகளை சேர்த்து, அரிசி - பருப்பு சேர்த்தும் வேகவைக்கலாம். ஆனால், அந்த முறையில் சுவை கொஞ்சம் குறையும் என்பதால், பலரும் வேகவைத்து பின் தாளிப்பதையே விரும்புவர்.