திராட்சை பழத்தை சாப்பிட்டால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?... அசத்தல் பட்டியல் இதோ.!
Grape (Photo Credit: Pixabay)

ஜூன் 29, ஆரோக்கியம் (Health Tips): திராட்சை தாவரவியல் வகையில் பெர்ரி பழத்தின் குடும்பம் ஆகும். திராட்சையில் விதையில்லாத திராட்சை, விதை உள்ள திராட்சை என வகைகள் இருக்கிறது. திராட்சை கொத்தில் குறைந்தபட்சம் 15 பழங்கள் முதல் அதிகபட்சம் 300 பழங்கள் இருக்கும்.

திராட்சை பழம் அந்தந்த நாட்டின் மண்வளத்தை பொறுத்து மஞ்சள், பச்சை, இளம்சிவப்பு, ஆரஞ்சு, கருப்பு, அடர் நீளம் ஆகிய நிறங்களில் காணப்படுகிறது. அதிகளவு ஊட்டச்சத்து, ஆக்சிஜனேற்ற கூறுகள் இருக்கும் திராட்சையில் 8000 வகைகள் இருக்கின்றன.

திராட்சையில் இருக்கும் ஊட்டச்சத்து உடலுக்கு பல்வேறு ஆரோக்கியத்தை வழங்குகிறது. இதில் நார்ச்சத்து, தாதுக்கள், வைட்டமின்கள் இருக்கின்றன. திராட்சையில் இருக்கும் நீர், நார்சத்து குளுக்கோஸ் அளவை குறைக்க உதவி செய்கிறது. இன்சுலின் எதிர்ப்பை குறைக்கும். Maamannan: மக்களின் மனதை கவர்ந்து வெற்றிவாகை சூடிய மாமன்னன் திரைப்படம்; மக்கள் அமோக வரவேற்பு.!

வைட்டமின் சி, கே, ஈ, பி போன்றவை நமது உடலுக்கு தினசரி தேவைப்படுபவை ஆகும். இவை எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் உதவி செய்கிறது. வைட்டமின் பி6 அறிவாற்றல் குறைவு அபாயத்தை தடுக்கிறது. பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை குறைகிறது. இதயத்தை பாதுகாக்கிறது, புற்றுநோய் ஏற்படாமல் உடலை தனது கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது.

திராட்சையின் ரெஸ்வெராட்ரோல், லுடீன், ஜியாக்ஸ்சாண்டின் தாவர கலவைகள் கண்களில் ஏற்படும் நோய் அபாயத்தை குறைக்கும். பெண்களுக்கு மெனோபாஸ் காலத்தில் ஏற்படும் எலும்பு பிரச்சனைகளில் இருந்தும் விடுதலை அளிக்கும். திராட்சை தூக்கத்தை மேம்படுத்தும்.