Fridge Egg (Photo Credit : freepik)

ஜூலை 03, சென்னை (Chennai News): உடலுக்கு அதிக ஊட்டச்சத்துக்களை வழங்கும் முட்டை காலை, மதியம், இரவு வேளைகளில் சாப்பிட சிறந்த உணவாகவும் கருதப்படுகிறது. பெரும்பாலான வீடுகளில் முட்டை எப்போதும் இருக்கும். ஃப்ரிட்ஜ் உள்ள வீடுகளில் முட்டை விரைந்து கெட்டுப் போகக்கூடாது என்ற விஷயத்திற்காக பிரிட்ஜிலும் வைத்து பயன்படுத்துவார்கள். முட்டையின் ஓட்டில் சால்மொனெல்லா என்ற பாக்டீரியா படர்ந்து காணப்படும். பொதுவாக இது இறைச்சியில் காணப்படும். இந்த பாக்டீரியா நமது உணவில் கலந்து விடும் பட்சத்தில் ஃபுட் பாய்சன், வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற உபாதைகள் ஏற்படும். ரேஷன் கடை பாமாயில் உடலுக்கு கெட்டதா?.. மக்களே தெரிஞ்சிக்கோங்க.. முழு விபரம் இதோ.! 

முட்டைகளை பிரிட்ஜில் சேமித்து வைப்பது நல்லதா?

முட்டை ஓட்டில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்க சூடான கொதிநீரில் நன்கு அதனை வேகவைக்க வேண்டும். சேமித்து வைக்கும் முட்டைகளை அவ்வாறு கொதிக்க வைக்க முடியாது என்பதால் கெடாமல் பாதுகாக்க நாம் பிரிட்ஜை தேர்வு செய்கிறோம். இதற்குப் பின் இந்த பாக்டீரியா உற்பத்தி என்பது இருக்காது. பிரிட்ஜில் வைக்கும் போது அவை குளிர்ச்சி காரணமாக முட்டை ஓட்டிலேயே உறைந்து விடும். அதே நேரத்தில் முட்டை லேசாக உடைந்து இருந்தாலும், அதனை அப்போதே பயன்படுத்தி விடுவது நல்லது. இல்லையெனில் அந்த முட்டையை தவிர்த்து விடுவது நல்லது. உடைந்த முட்டையை ஃப்ரிட்ஜில் சேகரித்து வைக்க கூடாது. 4 டிகிரி செல்சியஸ் வெப்பத்திற்கு குறைவாக இருக்க வேண்டும் அல்லது 71 டிகிரிக்கு மேல் கொதிக்க வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் முட்டை ஓட்டில் உள்ள பாக்டீரியா உடலுக்கு தீங்கு விளைவிப்பதை தடுக்க இயலும்.