Biscuit Cookies (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 01, சென்னை (Health Tips): இன்றளவில் கடைகளில் விற்பனை செய்யப்படும் பிஸ்கட்களை, பலரும் வாங்கி சாப்பிடுகிறோம். குறிப்பாக குழந்தைகளுக்கும் வாங்கி தருகிறோம். சில நேரம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, வயது வித்தியாசமின்றி பசிக்கும்போது பிஸ்கட் சாப்பிட்டு வருகின்றனர். இவ்வாறான பழக்கத்தை தொடர்ந்து கையில் எடுத்தால், கட்டாயம் அதுசார்ந்த பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டும். நாம் சுவை, ருசிக்காக என சாப்பிடும் எவ்வகை பிஸ்கட்டிலும் உடலுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துக்கள் கிடையாது. அதேபோல, அதிக சர்க்கரையும் உண்டு. Chapati Noodles: சுவையான சப்பாத்தி நூடுல்ஸ் செய்வது எப்படி? டிப்ஸ் இதோ.! 

கேடுகளை பரிசாக தரும் பிஸ்கட்கள்:

பிஸ்கட்டில் உடலுக்கு கேடுகளை தரும் கொழுப்புகள் அதிகம் இருக்கின்றன. இதனை தினமும் சாப்பிட்டால், மலச்சிக்கல் உண்டாகும். நள்ளிரவில் திடீர் பசியுணர்வு ஏற்படும். பிஸ்கட்டின் அதிக கலோரி உடல் எடையை அதிகரிக்க காரணமாக அமையும். டிரான்ஸ்பேட் கொழுப்பு கேடான கொழுப்புகளை உடலில் அதிகரிக்கும். அதிக மாவுசத்து, சோடியம், சர்க்கரை காரணமாக உடற்பருமன், அஜீரண பிரச்சனை, மந்தம், மலச்சிக்கல், இதய கோளாறுகளும் ஏற்படும்.