Bank Holiday Nov 2023 (Photo Credit: LatestLY)

அக்டோபர் 30, சென்னை (Chennai): 2023ம் ஆண்டின் இறுதி மாதங்களில் தற்போது நிலைகொண்டுள்ள நமக்கு, நவம்பர் மாதம் எப்போதும் பருவமழைக்கான காலம் ஆகும். நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் நல்ல மழைப்பொழிவு இருக்கும்.

இதனால் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு அடிக்கடி விடுமுறை கிடைக்கும் மாதம் என்பதால், அவர்களால் விரும்பப்படும். அதேபோல, வங்கிகளை பொறுத்தமட்டில் மார்ச் - ஏப்ரல் மாதத்தில் வங்கிக்கணக்குள் முடிக்கப்பட்டு, அரை ஆண்டுகள் மாதம் நவம்பரில் அமைகிறது.

இம்மாதத்தில் வங்கிகள் (Bank Holidays November 2023) இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்புப்படி 15 நாட்கள் விடுமுறை விடப்படும். விழா கொண்டாட்டங்கள், அரசு விடுமுறை, வார விடுமுறை என நவம்பர் மாதம் வங்கிக்களுக்கு 15 நாட்கள் விடுமுறை என்பதால், மக்கள் பணப்பரிவர்த்தனை விஷயத்தில் கவனமாக இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. Instagram Update: இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு குட்நியூஸ்.. நண்பரின் டைம்லைனில் புகைப்படம் பதிவிடும் வசதி விரைவில் அறிமுகம்.! 

நவம்பரில் வங்கி விடுமுறை அறிவிப்புகள் பின்வருமாறு.,

நவம்பர் 01: கர்நாடகா, மணிப்பூர், ஹிமாச்சல பிரதேசம் மாநிலங்களில் விடுமுறை

நவம்பர் 05: வார இறுதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை

நவம்பர் 10: கான்பூர், இம்பால், கேங்டாக், டெஹ்ராடூன் நகரங்களில் சிறப்பிக்கப்படும் வாங்களா திருவிழா விடுமுறை

நவம்பர் 11 & 12: இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை

நவம்பர் 13 & 14: தீபாவளி பண்டிகை விடுமுறை (மாநிலங்களுக்கு ஏற்ப)

நவம்பர் 15: லட்சுமி பூஜை, தீபாவளி விடுமுறை (மாநிலங்களுக்கு ஏற்ப)

நவம்பர் 19: ஞாயிற்றுக்கிழமை விடுமுறை

நவம்பர் 20: சாத் திருவிழா விடுமுறை (மாநிலங்களுக்கு ஏற்ப)

நவம்பர் 23: உத்திரகாண்ட், மணிப்பூர் மாநிலங்களில் விடுமுறை

நவம்பர் 25 & 26: நான்காவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை

நவம்பர் 27: குருநானக் ஜெயந்தி விடுமுறை (மாநிலங்களுக்கு ஏற்ப)

நவம்பர் 30: கர்நாடக மாநிலத்தில் கனகதாஸா ஜெயந்தி விடுமுறை

மேலுள்ள நாட்களில் வங்கிகள் விடுமுறை என்பதால், பணப்பரிவர்த்தனை செய்யும் நபர்கள் முன்னதாகவே திட்டமிட்டுக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.