Immune System (Photo Credit : Pixabay)

மே 21, சென்னை (Health Tips Tamil): ஒவ்வொருவரின் உடல் இயக்கத்திற்கும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் காரணமாக அமைகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் டி, துத்தநாகம் போன்றவை உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை (Immune System) பலப்படுத்தும் முக்கிய தாதுக்கள் ஆகும். இது குடலில் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கிறது. வைட்டமின் டி இயற்கையாகவே சூரிய ஒளியிடமிருந்து பெறப்படுகிறது.

நோய் எதிப்பு சக்தியை பெருக்குவது எப்படி ?

மேலும் பால், மீன், தானியங்கள் போன்றவற்றிலும் வைட்டமின் டி சத்துக்களை பெறலாம். உணவுகளில் வைட்டமின் ஏ, சி, சத்துக்கள் நிறைந்த சாலமன் மீன், கீரைகள், முட்டை, கேரட், உருளைக்கிழங்கு, குடைமிளகாய், தக்காளி போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உடலுக்கு போதுமான நார்ச்சத்து கிடைக்காத பட்சத்தில் பல உடல்நல கோளாறுகளும் அடுத்தடுத்து ஏற்படும். குடல் ஆரோக்கியத்தில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி முக்கிய பங்கு வகிக்கிறது. புகைப்பழக்கம் உடல் நலனை கேள்விக்குறியாக்கும். இது நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் தன்மை கொண்டது. Cooking Tips: வீட்டிலேயே சுவையான தயிர் செய்வது எப்படி?.. இந்த டிப்ஸை தெரிஞ்சிக்கோங்க.! 

நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிப்படைவதற்கான காரணம் :

புகையிலையில் உள்ள நிக்கோட்டின் சளி, இருமல், நுரையீரல் தொற்று போன்றவற்றையும் உண்டாக்கும். அதே போல ஆல்கஹாலும் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் மிகப்பெரிய அளவு பாதிப்பை உண்டாக்கும். போதுமான தூக்கம் இல்லாத பட்சத்தில் கிருமிகள் அதிகரிக்க வழிவகை செய்யும். மன அழுத்தம், கவலை போன்றவையும் உடலில் இருக்கும் நோய்களை அதிகரிக்க காரணமாக அமைகிறது. அதே நேரத்தில் உடற்பயிற்சி செய்வதால் இவ்வாறான பிரச்சனைகளை குறைக்கலாம்.

மருத்துவர்கள் கூறும் தகவல் :

குறிப்பாக சிறுவயதுள்ள குழந்தைகள் வளரும் போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி ஒருசேர வளர்ந்து வர வேண்டும். அவ்வாறு வளராத பட்சத்தில் அந்த குழந்தைகளின் உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டியது அறிகுறி என மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.