டிசம்பர், 10: உடலின் ஆரோக்கியத்தை (Improve Health) மேம்படுத்த உடற்பயிற்சி முக்கியமானதாகும். சில உடற்பயிற்சிகள் உடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், நோயை கட்டுப்படுத்தவும் உதவி செய்கிறது. யோகா (Yoga) மனநலனை பாதுகாக்கிறது. உடற்பயிற்சி என்பது மூளையின் செயல்திறனை அதிகப்படுத்தும். மூளையில் இருக்கும் நியூரான் தூண்டப்பட்டு நினைவுத்திறன் அதிகரிக்கும்.

50 வயதை கடந்த நபர்களுக்கு நினைவுத்திறன் குறைபாடு காரணமாக அல்சைமர் நோய் ஏற்படும். காலை நேரத்தில் நாம் மேற்கொள்ளும் உடற்பயிற்சியானது அல்சைமர் நோயின் தாக்கத்தினை குறைக்கும். நாளொன்றுக்கு 30 நிமிட உடற்பயிற்சி (Daily Exercise) செய்தால் மூளை புத்துணர்ச்சியுடன் இருக்கும், உடல் ஆரோக்கியமடையும், மனநலன் மேம்படும்.

அதனைப்போல, மூளையில் புதிய நியூரான்கள் உருவாகும். இது அல்சைமர் மனநோயை இருந்து நம்மை பாதுகாக்கிறது. பிற்கால வாழ்க்கையில் மனநோய் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டாலும்,, அதனைத்தடுக்கும் ஆற்றலானது உடற்பயிற்சிக்கு உண்டு. World Cup Cricket: கிரிக்கெட்டில் உலகக்கோப்பையை தட்டிச்சென்ற நாடுகள் எவையெவை?.. ஆஸ்திரேலியாவின் அசைக்க முடியாத ரெக்கார்ட்..! 

உடற்பயிற்சியை செய்து வருவதால் பதற்றத்தின் அளவு கட்டுப்படுத்தப்படும். மனம் அமைதியாக இருக்கும். தன்னம்பிக்கை ஏற்படும். கவலைகள் நீங்கும். அலுவலகம் மற்றும் வீடுகளில் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க உடற்பயிற்சி & யோகா சிறந்த பலனை தரும். இதய பாதுகாப்பும் அதிகரிக்கும்.

ஒருவருக்கு பரம்பரையாக இதயநோய் பிரச்சனை ஏற்படும் பட்சத்தில், அவர் உடற்பயிற்சி செய்தால் இதய நோய் சரியாகும். உடற்பயிற்சி உடலின் எடையை கட்டுக்குள் வைப்பதால், பிற பிரச்சனைகளும் நமக்கு ஏற்படாது. உடற்பயிற்சியுடன் கூடிய சரியான உணவு, உடல் கட்டமைப்பு போன்றவை அழகை அதிகரிக்கும்.

உடல் பருமன் உள்ளவர்களுக்கு ஏற்படும் சர்க்கரை வியாதி பிரச்சனை குணமாகும். தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்யாமல் சிறிது இடைவெளியுடன் உடற்பயிற்சி செய்யலாம். இதனால் இரத்த ஓட்டம் அதிகரித்து, தசைகளுக்கு ஆக்சிஜன் கிடைக்கும். உடலுக்கு தேவை இல்லாத கொழுப்புகள் கரைக்கப்படுவதால், செரிமான கோளாறுகள் சரியாகும்.

அன்றாடம் நாம் மேற்கொள்ளும் உடற்பயிற்சி மூளையில் புதிய செல்களை வளர உதவுகிறது. இதனால் ஞாபக சக்தி அதிகரிக்கும். உடலில் கொழுப்புகள் கரைந்து தசைகள் வலுப்பெறும். தினமும் உடற்பயிற்சி செய்வது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மனஉறுதி கிடைக்கும்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 10,2022 08:46 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).