Child Smart Phone Addiction(Photo Credit : Pixabay)

ஜூலை 01, சென்னை (Health Tips Tamil): குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தி வரும் ஸ்மார்ட்போன் காரணமாக பசி, தூக்கம், படிப்பு போன்ற முக்கிய விஷயங்களை மறந்து செல்போனே கதி என கிடைக்கும் சூழல் உருவாகிவிட்டது. குழந்தைகள் அடம்பிடித்தால் ஒரு சில பெற்றோர்கள் அவர்களை அமைதிப்படுத்த செல்போனை காண்பிக்கின்றனர். இது மிகப்பெரிய அபாயத்தை ஏற்படுத்துகிறது. அதிக நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் கதிர்வீச்சு பாதிப்புகளை குழந்தைகள் எதிர்கொள்ள நேரிடும். Cooking Tips: கிராமத்து ருசியில் முட்டை குழம்பு செய்வது எப்படி?.. இன்றே செய்து அசத்துங்கள்.! 

சாப்பிடும்போது செல்போனுக்காக அடம்பிடிக்கும் குழந்தைகள் :

இதனால் கண்களின் படலம் பாதிக்கப்படும். சிறுவயதிலேயே பார்வை போகும் அபாயம் உண்டாகும். அதேபோல ஸ்மார்ட்போனுக்கு சிறுவயதில் அடிமையாகும் குழந்தைகள் பேசாமல் பேச்சுத்திறனை இழக்கவும் வாய்ப்புள்ளது. ஓடி விளையாட வேண்டிய வயதில் அவர்கள் செல்போனில் நேரத்தை செலவிட்டால் (Cell Phone Addiction in Children) அதுவே வாழ்க்கை என நினைத்து விடுவர். இதன் பின்விளைவுகள் குறித்து பலருக்கும் தெரியாத நிலையில், குழந்தைகள் மொபைல் ஃபோனை பார்த்து சாப்பிடும் பழக்கத்தையும் கையில் எடுத்துவிட்டனர். இது செரிமான செயல்பாட்டை பாதிக்கும். ஊட்டச்சத்து பிரச்சனையையும் உண்டாக்கும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் உடல்நல பிரச்சனைகள் :

நீண்ட நேரம் கண்கள் சிமிட்டாமல் செல்போன் பார்த்துக்கொண்டிருப்பதால் டிஜிட்டல் திரையிலிருந்து வெளிப்படும் ஒளி, மெலடோனின் ஹார்மோனை தடுக்கும். ஸ்மார்ட்போன் பயன்பாடு மனநல பாதிப்புக்கும் மிகப்பெரிய காரணமாக அமைகிறது. அதேபோல பேச்சு குறைபாடு, பார்வை குறைபாடு, கேள்வி திறன் குறைபாடு, கற்றல் குறைபாடு ஏற்படும். இவ்வாறான பிரச்சனைகளால் குழந்தைகள் அவதிப்பட்டால் கட்டாயம் அவர்களின் எதிர்காலமும் கேள்வி குறியாகும். ஆகையால் சிறுவர்களின் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய தடையாக இருக்கும் செல்போனை முடிந்தவரை பெற்றோர்கள் கொடுக்காமல் இருப்பது நல்லது.