
ஜூன் 30, சென்னை (Cooking Tips Tamil): முட்டையில் ஆம்லெட், ஆப் பாயில், கலக்கி, வேகவைத்த முட்டை குழம்பு, உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு என பல வகையாக நாம் சாப்பிட்டு இருப்போம். அந்த வகையில் இன்று கிராமத்து ருசியில் செய்யப்படும் சுவையான முட்டை குழம்பு வைப்பது எப்படி? என தெரிந்து கொள்ளுங்கள். Nethili Meen Thokku: நாவூற வைக்கும் நெத்திலி மீன் தொக்கு.. பாட்டி ஸ்டைல் கிராமத்து அமிர்தம்.. இப்படி செய்து அசத்துங்க.!
தேவையான பொருட்கள் :
முட்டை - 4,
வெங்காயம் - 2,
தக்காளி - 2,
கொத்தமல்லி - சிறிதளவு,
கரம் மசாலா - 1 கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - தேவையான அளவு.
தாளிக்க :
பட்டை - 1,
கருவேப்பிலை - சிறிதளவு,
கிராம்பு - 1.
அரைக்க தேவையான பொருட்கள் :
தேங்காய் துருவல் - 2 கரண்டி,
வரமிளகாய் - 2,
பூண்டு - 10 பற்கள்,
இஞ்சி - சிறிதளவு,
மல்லி, மிளகு, சீரகம் - தலா அரைக்கரண்டி.
செய்முறை :
முதலில் எடுத்துக்கொண்ட முட்டையை வேகவைத்து நீள வாக்கில் கோடு போட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். பின் மேலே அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிதமான தீயில் வறுத்து, மிக்ஸியில் சேர்த்து அரைத்து விழுதாக்கிக்கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, கருவேப்பிலை, கிராம்பு சேர்த்து முதலில் தாளிக்க வேண்டும். அதனுடன் வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். பிறகு அரைத்த பேஸ்ட், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
இறுதியாக கரம் மசாலா போன்ற பொருட்களை சேர்த்து கொதிக்க விட வேண்டும். இந்த கலவை தயாரானதும், முட்டையை சேர்த்து 5 நிமிடத்திற்கு பின் இறக்கினால் சுவையான முட்டை குழம்பு தயார்.