Kajal Side Effects (Photo Credit : @Mithra's Lifestyle Youtube)

ஆகஸ்ட் 10, சென்னை (Health Tips): பிறந்த குழந்தைகளுக்கு பெற்றோர் அழகுக்காக கண் மை போடுவது தொடர்கிறது. முந்தைய காலங்களில் வீட்டிலேயே வயதானவர் கண் மையை தயார் செய்வார்கள். ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில் கடைகளில் விற்பனை செய்யப்படும் செயற்கை கண் மைகளை வாங்கி பலரும் பயன்படுத்தி வருகின்றனர். கண்மை போடுவதால் குழந்தைகளின் அழகு அதிகரிக்கும், கண்கள் பெரிதாகும் என்ற எண்ணத்துடன் கண் மை போடப்படுவதாகவும் கூறப்படுகிறது. Health Tips Tamil: உருளைக்கிழங்கு சிப்ஸ், ப்ரைஸ் அதிகம் சாப்பிடுறீங்களா? உங்களுக்குத்தான் எச்சரிக்கை.! 

கண் மை குறித்து மருத்துவர்கள் கூறுவது என்ன?

இந்த விஷயம் குறித்து மருத்துவர்கள் பல அறிவுறுத்தலை பெற்றோருக்கு எடுத்துரைக்கின்றனர். அதாவது கண்களில் கண் மை போடுவதால் கண்கள் பெரிதாகாது. மென்மையான அமைப்பான கண்களில் கண் மை பயன்படுத்துவது தவறான விஷயம். மனிதனின் உடல் உறுப்பில் கண்களின் வளர்ச்சி என்பது மரபணுவை சார்ந்தே அமையும். குழந்தையின் பெற்றோர், அவர்களின் பெற்றோர் என மரபணுவை பொறுத்து அமையும் விஷயத்தில் தவறான கூற்றை பயன்படுத்துவது சரியானது இல்லை. இதனால் கண்கள் பெரிதாகாது.

பெற்றோர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தல் :

குழந்தைகள் ஒரு சில நேரம் கண் மையை தொட்டு கண்ணில் தேய்க்கும் போது அதன் ரசாயனம் கண்களை பாதிக்க வாய்ப்புகள் உண்டு. இதனால் எரிச்சல், அரிப்பு போன்றவையும் ஏற்படுகிறது. தரமான பொருட்களை பயன்படுத்தி கண் மையை தயாரிக்கலாம் அல்லது தரமுள்ள கண் மைகளை வாங்கி அவசியமென்றால் பயன்படுத்திக் கொள்ளலாம். அதே நேரத்தில் கடைகளில் விலை குறைவாக விற்பனை செய்யப்படும் கண் மைகள் ரசாயனம் நிறைந்தவை. அதில் மிக கவனமாக இருக்க வேண்டும். குழந்தை என்றாலே அழகு என்ற நிலையில், கண் மையை வைத்து தான் அதனை அதிகரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆகையால் பெற்றோர் சிந்தித்து செயல்படுவது நல்லது.