Potato French Fries (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 9, சென்னை (Chennai News): தினமும் நாம் சாப்பிடும்போது, உணவுக்கு தொட்டுக்கொள்ள சாப்பிடும் உணவுக்கேற்ப தொடுக்கறியை தேர்வு செய்வோம். தயிருக்கு பாகற்காய் முட்டை பொரியல் என அவரவரின் விருப்பத்திற்கேற்ப அனைத்தும் மாறுபடும். ஆனால், உருளைக்கிழங்கு எந்த வகையான உணவுக்கும் தொடுக்கறியாக பலரால் தேர்வு செய்யப்படுகிறது. உருளைக்கிழங்கு மசியலில் தொடங்கி வடை வரை பலரும் அதனை சாப்பிட்டு ருசிக்கின்றனர். தற்போதுள்ள காலத்தில் உருளைக்கிழங்கில் தயாரிக்கப்படும் பிரென்ச் பிரைஸ் என்ற வகையான உணவு வகை இளம் சிறார்களிடையே அதிகம் விரும்பப்படுகிறது. உண்மையில் உருளைக்கிழங்கை பிரென்ச் ப்ரைஸ் போல அதிக வெப்பத்தில் எண்ணெயில் பொறித்து வேகவைத்து சமைப்பது ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். Independence Day Speech: சுதந்திர தினம் பேச்சு போட்டி.. உங்களுக்கான சிறப்பு கட்டுரை இங்கே.! 

நீரிழிவு, இதய நோய் ஆபத்து:

பிரெஞ்சு பிரைஸ் முறையில் தயாரிக்கப்படும் உணவை சாப்பிடுவது சர்க்கரை நோயை ஏற்படுத்தும் என்பது தொடர்பாக ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் பிரெஞ்சு பிரைஸ் சாப்பிடும் 2 லட்சத்துக்கும் அதிகமான நபர்களிடம் சோதனை செய்யப்பட்டதில், அவர்களுக்கு சர்க்கரை நோய், இதய பிரச்சனை பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரெஞ்சு பிரைஸ் வகை உருளைக்கிழங்கு பொரியலை அதிக எண்ணெயில் வருகின்றனர். இதனால் அதன் டிரான்ஸ் கொழுப்புகள் தன்மை உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஊட்டச்சத்து விகிதங்களும் மாறுகின்றன. இரத்த நாளங்கள் சேதமாகி, உடல்நல பாதிப்பு ஏற்படுகிறது. உருளைக்கிழங்கு மாவுசத்து நிறைந்தது ஆகும். இதில் அதிக கார்போஹைட்ரேட், நார்சத்து, பொட்டாசியம், வைட்டமின் சி, மெக்னீசியம் சத்துக்கள் உள்ளன. இதனை சரியான முறையில் வேகவைத்து சாப்பிடுவது நல்லது. தீயில் சுட்டு குறைந்த அளவு சாப்பிடலாம். இதனால் நீரிழிவு பிரச்சனை அதிகம் இல்லை ஆனால், எண்ணெயில் பொரித்து எடுக்கப்படும் பிரெஞ்சு பிரைஸ், உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவை உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.