Easy Cooking: சமையல் வேலையை நிமிடத்தில் முடிக்க களமிறக்கப்பட்ட அசத்தல் இயந்திரங்கள் என்னென்ன?.. இல்லத்தரசிகளே தெரிஞ்சுக்கோங்க.!
Template: Easy Cooking Machines

டிசம்பர், 8: ஆணும்-பெண்ணும் ஓய்வின்றி எதிர்கால தேவைக்காக உழைத்துவரும் இக்காலத்தில், ஆண்களும் வீட்டு வேளைகளில் பங்குகளை எடுத்துக்கொள்ள விரும்புகின்றனர். அதனைப்போல, தொழில்நுட்ப யுகத்தில் பெண்கள் சமயலறையில் (Cooking) இருக்கும் வேலைகளை எளிதாக்க சாதனைகளை கேட்டு பெற்று வருகின்றனர். அன்றைய நாட்களில் தோசையோ, இட்லியோ சமைக்க வேண்டும் என்றால் மாவு அரைப்பது மிகப்பெரிய வேலையாக இருக்கும். ஆனால், இன்று மாவை கிரைண்டரில் அரைக்க ஏற்பாடு செய்துவிட்டு, அது அரைபடும் நேரத்தில் பிற பணிகளையும் நாம் கவனித்து வருகிறோம்.

ஸ்மார்ட் யுகம் (Smart World): இன்றளவில் சமையல் அறையில் இருக்கும் வேலைகளை எளிதாக்க பல பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டன. கிரைண்டர் கூட தற்போது அப்டேட் செய்யப்பட்டுவிட்டது. அரிசி, உளுந்து என தனித்தனியே அரைக்க தேவையில்லை. இரண்டையும் கிரைண்டர் கொள்ளும் அளவு எடுத்து தண்ணீர் ஊற்றினால் அதுவே இரண்டையும் நன்கு அரைத்துவிடுகிறது. தண்ணீர் தேவைப்பட்டால் அதனை சேர்த்து மாவை அரைத்துக்கொள்ளலாம். பாத்திரம் கழுவும் வேலை கூட மிச்சமாகிறது. கைகளில் மாவே படாமல் மாவரைத்துவிடுகிறோம்.

குக்கர் முதல் சாதம் வடிக்கும் நவீன மெஷின் வரை: அன்றைய நாட்களில் மண்பாண்டத்தில் அரிசி சாதம் வடித்தோம். இன்று அதற்கென பாத்திரங்கள் வந்தாலும், அவ்வேலையையும் எளிதாக்க குக்கர் அறிமுகம் ஆகியுள்ளது. 1 குவளை அரிசிக்கு 2 குவளை தண்ணீர் என்ற பதத்தில் குக்கரில் 4 விசில் முதல் 6 விசிலுக்குள் அரிசியின் பதத்திற்கு ஏற்றாற்போல சாதம் வடிக்கப்படுகிறது. முன்பு சாதம் வெந்ததும் அதில் உள்ள தண்ணீரை வெளியேற்றுவது ஒரு வேலையாக இருந்த நிலையில், குக்கரில் அவ்வேலைகள் அனைத்தும் நீங்கியது. ஆனால், குக்கர் சாப்பாடு உடலுக்கு உகந்தது அல்ல என்றும் ஒருகூற்று உள்ளது. School & College Student: அதிகரிக்கும் பள்ளி & கல்லூரி மாணவிகள் மீதான வன்முறை.. ஒவ்வொரு பெற்றோரும் செய்ய வேண்டியது என்ன?.! 

வீட்டிலேயே எண்ணெய்:  நமது வீட்டில் எண்ணெய் அரைக்கும் வசதியை ஏற்படுத்தி கொடுக்க எண்ணெய் அரைக்கும் இயந்திரமும் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. கடைகளில் சுத்தமான நல்ல எண்ணெய்யா? என்று வடிவேலு பாணியில் எத்தனை முறை கேட்டாலும் மனது ஒப்புக்கொள்வதில்லை. அதனை தவிர்க்க தேங்காய் எண்ணெய், எள், சூரியகாந்தி, பாதம் எண்ணெய் தயாரிக்கவும் இயந்திரம் வந்துவிட்டது. இந்த இயந்திரத்தில் எண்ணெய் வித்துக்களை சேர்த்து அரைத்து சக்கை தனியாக எண்ணெய் தனியாக என பிரித்து கொடுத்துவிடுகிறது.

சப்பாத்தி தேய்ப்பதும் எளிது: அதனைப்போல, கிரைண்டர் வடிவில் இருக்கும் சப்பாத்தி தேய்க்கும் இயந்திரம் பூரிக்கட்டைகளுக்கு விடுதலை கொடுத்துள்ளது. சப்பாத்தி மாவினை நாம் எப்போதும் போல பிசைந்து, அக்கலவையை இயந்திரத்தில் செலுத்தினால் பூரி அழகிய வட்டமான வடிவிலேயே கிடைக்கிறது. இந்த இயந்திரத்தை வைத்து ஐந்து பேருக்கு தேவையான சப்பாத்தியை ஒருநேரத்தில் தயார் செய்யலாம். சப்பாத்தி மாவு கலக்கும் இயந்திரமும் உள்ளது. ஆனால், அதனை சிலர் மட்டுமே விரும்புகிறார்கள்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 8, 2022 08:32 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).