ஜூலை 15, சென்னை (Health Tips Tamil): உடற்பயிற்சி செய்பவர்கள், தசை வளர்க்க விரும்பும் நபர்கள் என பலரும் பச்சை முட்டையை அதிகம் சாப்பிட்டு வருகின்றனர். மேலும் ஸ்மூத்தி போன்ற பெயர்களிலும் பச்சை முட்டையை குடிப்பது அதிகரித்து வருகிறது. இது ஆரோக்கியத்திற்கு நல்ல விஷயம் இல்லை என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. அதாவது பச்சை முட்டையில் புரதம், நல்ல கொழுப்புகள், வைட்டமின் ஏ, பி, இ, பி12 ஆகிய சத்துக்கள் இருக்கின்றன. Health Tips: சமோசா, ஜிலேபி பிரியர்களே உஷார்.. ஆபத்தான உணவுப்பட்டியலில் முக்கிய இடம் இதற்கு தான்.!
பச்சை முட்டையை சாப்பிடுவதால் என்ன நடக்கும் ?
மேலும் இரும்புச்சத்து, பாஸ்பரஸ் போன்றவையும் இருக்கின்றன. உடல் வலுவை அதிகரிக்கவும், வலுவான தசைகளை ஏற்படுத்தவும், சருமத்தை பாதுகாக்கவும் இது உதவும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் மேற்கொண்ட சில ஆய்வுகளின் படி, பச்சை முட்டையை மிதமான அளவு உட்கொண்டால் மட்டுமே பிரச்சனை இல்லாமல் இருக்க முடியும். வேகவைக்காத முட்டைகளை சாப்பிடுவதால் சாலமோனெல்லா என்ற பாக்டீரியா உடலுக்குள் நுழைந்து வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, காய்ச்சல், தலைவலி, தசை வலி போன்றவற்றையும் ஏற்படுத்தும்.
மருத்துவ வல்லுநர்களின் எச்சரிக்கை :
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு மிகப்பெரிய உடல்நல கோளாறு ஏற்படும் எனவும் எச்சரிக்கப்படுகிறது. கர்ப்பிணி பெண்கள், இளம் குழந்தைகள், முதியவர்கள், குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள், புற்றுநோய் சிகிச்சையில் இருப்போர் பச்சை முட்டையை தவிர்க்க வேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த விஷயத்தை ஞாபகம் வச்சுக்கோங்க :
இது தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், முட்டை ஓட்டில் இருக்கும் சாலமோனெல்லா பாக்டீரியா மிகப்பெரிய உடல்நலக்குறைவை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. முட்டையை பச்சையாக சாப்பிடாமல் வேகவைத்து உண்பது, பொறித்து உண்பது போன்றவை உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்கும். மேலும் பச்சையாக முட்டையை உண்ண விரும்பும் நபர்கள் அதனை முழுமையாக தவிர்த்துவிடுவது பாக்டீரியா உடலுக்கு செல்லாமல் இருக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.