Samosa Jalebi (Photo Credit : Pixabay)

ஜூலை 14, நாக்பூர் (Health Tips Tamil): இந்தியாவில் ஜங்க் ஃபுட் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்துள்ளதால் 2050 ஆம் ஆண்டுக்குள் 46 கோடிக்கும் அதிகமானவர்கள் அதிக எடை மற்றும் உடல் பருமனால் பாதிக்கப்படலாம் என்று ஆய்வு முடிவில் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. நகர்புறங்களில் உள்ளவர்கள் நொறுக்குதீனிகள், சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுப்பொருட்கள், எண்ணெயில் பொரித்தெடுக்கப்பட்ட உணவு உள்ளிட்டவற்றை அதிகம் உண்பதால் உடல்பருமனால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் சுறுசுறுப்பு தன்மை குறைந்து உடலில் செயல்பாடு இல்லாமை ஏற்படுகிறது. குறிப்பாக குழந்தைகளிடையே உடற்பருமன் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. Health Tips: குழந்தைகள் சாப்பிடும்போது செல்போன் கொடுக்குறீங்களா?.. பெற்றோர்களே உஷார்.! 

சுகாதார எச்சரிக்கை பட்டியல் :

இதன் காரணமாக நாக்பூரில் உள்ள எய்ம்ஸ் உட்பட அனைத்து மத்திய அரசு மருத்துவமனைகளிலும் எண்ணெய் மற்றும் சர்க்கரை அளவுகளை பட்டியலிட்டு உணவுப் பொருட்களின் பலகைகள் வைக்க மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் படி, நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் சர்க்கரை, கொழுப்பு அளவு உள்ளிட்டவற்றின் பட்டியல்கள் இடம்பெறுகின்றன. இதனால் உடலுக்கு தேவையற்ற உணவை நீக்க முடியும். சமோசா, ஜிலேபி உள்ளிட்டவையும் எண்ணெய், உப்பு அதிகம் உள்ள உணவுப்பொருட்களில் அடங்குவதால் சுகாதார எச்சரிக்கை பட்டியலில் விரைவில் சேர்க்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

சமோசா, ஜிலேபியில் எச்சரிக்கை வாசகம் :

மேலும் இந்திய இருதயவியல் சங்க நாக்பூர் தலைவர் அமர் அமலே, விரைவில் சமோசா, ஜிலேபி விற்கப்படும் பாக்கெட்டுகளிலும் எச்சரிக்கை வாசகம் இடம்பெறலாம் என்று தெரிவித்துள்ளார். உயர் ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளிட்டவைகளுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக எண்ணெய், உப்பு, சர்க்கரை அதிகமுள்ள பொருட்களிலும் இனி எச்சரிக்கை வாசகம் எழுதப்படுவது மக்களின் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும் என சுகாதார ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.