
பிப்ரவரி 09, சென்னை (Cooking Tips): இன்றளவில் பலரின் வீடுகளில் இரவு நேர உணவாக சப்பாத்தி பரிந்துரைக்கப்படுகிறது. பலரும் அதனை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள காய்கறி குருமா, எம்ப்டி சால்னா, மல்லி-புதினா சட்னி, கெட்டியான தேங்காய் துவையல் என பல விஷயங்களை வைத்து சாப்பிட்டு இருப்போம். இன்று ஒரு மாறுதலுக்கு சுவையான முட்டை பட்டர் மசாலா (Muttai Butter Masala) செய்வது எப்படி என காணலாம்.
முட்டை பட்டர் மசாலா (Egg Butter Masala) செய்யத் தேவையான பொருட்கள்:
வேகவைத்த முட்டை - 6,
வெங்காயம் - 3,
தக்காளி - 4,
பச்சை மிளகாய் - 1,
இஞ்சி பூண்டு விழுது - ஒரு கரண்டி,
சீரகம் - 1 கரண்டி,
முந்திரி - 5,
மஞ்சள் தூள் - கால் கரண்டி,
மிளகாய் தூள் - 3 கரண்டி,
வெண்ணெய் - 3 கரண்டி,
ஏலக்காய், பட்டை, கிராம்பு - 2,
உப்பு - தேவையான அளவு. Masala Bread Recipe: காரசாரமான மசாலா பிரெட் செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!
செய்முறை:
முதலில் எடுத்துக்கொண்ட வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். வேகவைத்த முட்டையை தோல் உரித்து, கத்தியால் குறுக்கும், நெடுக்குமாக கீறி வைத்துக்கொள்ள வேண்டும்.
பின் வானெலியில் எண்ணெய் ஊற்றி மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சிறிதளவு சேர்த்து முட்டையை அதில் முதலில் சேர்த்து கிளறி எடுக்க வேண்டும்.
அதே பாத்திரத்தில் வெண்ணெய் விட்டு பட்டை, ஏலக்காய், கிராம்பு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். பின் வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். இதில் மிளகாய்தூள் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
பின் இந்த கலவையை மிக்சியில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அரைத்த விழுதை மீண்டும் வானெலியில் பட்டர் விட்டு சேர்த்து நன்கு கிளறி, பின் முட்டையை சேர்த்து கிரேவி பதம் வரும் வரையில் காத்திருந்து இறக்கினால் சுவையான முட்டை பட்டர் மசாலா தயார்.