செப்டம்பர் 14, சென்னை (Chennai News): பள்ளி, கல்லூரி, அலுவலகம் உட்பட பல வேலைகளுக்காக தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வோர் காலையில் விரைந்து எழுவதற்கு செல்போனில் அலாரம் வைக்கின்றனர். இந்த செல்போன் அலாரம் பலருக்கும் உபயோகமாகிறது என்றாலும் தொடர்ச்சியாக அலாரம் வைப்பது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் அலாரம் சத்தம் இதயத்திற்கு திடீர் அதிர்ச்சியை உண்டாக்கி மாரடைப்பு போன்ற அபாய கட்டத்தையும் ஏற்படுத்தலாம் எனவும் தெரிவிக்கின்றனர். வெர்ஜீனியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் இந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. அலாரம் காரணமாக உடலில் ஏற்படும் மாற்றங்களை விரிவாக ஆராய்ந்து அதிகாரிகள் 32 தன்னார்வலர்களுக்கு சோதனை செய்து இந்த முடிவுகளை அறிவித்துள்ளனர். மேலும் தூங்கும் போது ஸ்மார்ட் வாட்ச், ரத்த அழுத்தம் பரிசோதனை செய்யும் கருவிகளை அவர்களுக்கு அணிவித்தும் இந்த சோதனை நடைபெற்றுள்ளது. Health Tips: குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன? அசத்தல் டிப்ஸ் இதோ.!
அலாரத்தால் ஏற்படும் பாதிப்புகள்:
முதல் நாள் அலாரத்தில் எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் இயல்பாக அவர்கள் இருந்தாலும், இரண்டாவது நாளில் திடீர் மாற்றங்கள் உண்டாகியுள்ளது. அலாரம் இல்லாமல் இயல்பாக எழுந்திருப்பவர்களுக்கும், அலாரம் அடித்து எழுந்திருப்பவர்களுக்கும் ரத்த அழுத்தம் 74% வேறுபாடுகளுடன் பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் குறைவான நேரம் தூங்கிய போது ரத்த அழுத்தம் அதிகம் இருந்ததாகவும், மன அழுத்தத்தை அதிகரித்து ஹார்மோன் சுழற்சிக்கு இது வித்திடுவதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த ஹார்மோன் திடீரென இதயத்தை தாக்குவதால் இதயத்துடிப்பு அதிகரித்து ரத்தநாளங்கள் சுருங்கி மாரடைப்பு போன்ற பிரச்சனை ஏற்படலாம் எனவும் எச்சரிக்கின்றனர். பக்கவாதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அறிவுறுத்தப்படுகிறது. சரியான நேரத்தில் தூங்கி எழுந்து பழக வேண்டியது அவசியம் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அலாரத்தின் தேவையை குறைப்பது இதய ஆரோக்கியத்திற்கு கட்டாயம் தேவை என்றும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.