Perfume (Photo Credit: Pixabay)

ஜனவரி 21, சென்னை (Health Tips): இன்றளவில் உள்ள இளம் தலைமுறை, வாசனை திரவியத்தை பயன்படுத்தும் பழக்கம் கொண்டுள்ளது. குளிர்காலம், கோடைகாலம் என எப்போதும் வாசனை திரவியம் பயன்படுத்தப்படுகிறது. நமது உடலின் நறுமணத்திற்காக பயன்படுத்தப்படும் வாசனை திரவியங்கள், தன்னகத்தே ஆபத்துகளை கொண்டு இருக்கின்றன. வாசனை திரவியம் பயன்படுத்தும் நபர்கள் அதுகுறித்து தெரிந்துகொள்வது இல்லை.

விளம்பரங்களின் யுக்தி:

வயது பேதமின்றி பயன்படுத்தப்படும் வாசனை திரவியத்தில், வெளிநாட்டு திரவியம் என்றால் பலருக்கும் கொள்ளைப்பிரியமாக இருக்கிறது. மேலும், வாசனை திரவியங்கள் விற்பனை செய்யும் நிறுவனங்களும், வாசனை திரவியத்தை பயன்படுத்தினால் பெண் கூரையை பிரித்துக்கொண்டு வந்து நம்முடன் ஒட்டி உட்கார்ந்து கொஞ்சி குலாவுவார் என மூளைச்சலவை செய்கின்றன. Carrot Chips Recipe: மொறு மொறுன்னு கேரட் சிப்ஸ் செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!

இதய பாதிப்புகள் அதிகமாகும்:

மருத்துவ நிபுணர்களின் கருத்துப்படி, வாசனை திரவியத்தில் இருக்கும் பித்தலேட் என்ற ரசாயனம், நெயில் பாலிஷ் மற்றும் கூந்தல் பராமரிப்பு பொருட்களிலும் காணப்படுகிறது. இது பிளாஸ்டிக் பொருட்கள், உணவு பேக்கேஜிங் தயாரிப்பு விஷயத்திலும் பயன்படுத்தப்படுகிறது. இன்சுலின் எதிர்ப்பு வேதிப்பொருளான பித்தலேட், இதயம் சார்ந்த நோய்களின் பாதிப்பை அதிகரிக்கும். குழந்தையின் வளர்ச்சியும் பாதுகாக்கும். மேலும், உடலில் நீண்டகால விளைவை ஏற்படுத்தி, குழந்தைகளின் மூளையையும் பாதிக்கும். வாசனை திரவியம் பயன்படுத்தும்போது மனநிலை மேம்படுவது போல உணர்ந்தாலும், அது ஆபத்தை தரும்.

கவனம் தேவை:

இதுமட்டுமல்லாது உடலில் இருக்கும் நாளமில்லாத சுரப்பி அமைப்பிலும் பிரச்னையை ஏற்படுத்தும். இதனால் இனப்பெருக்க விஷயங்களும் பாதிக்கப்படும். ஹார்மோன், தைராய்டு, மனநிலை பிரச்சனைகளும் மேலோங்கும். ஆகையால், ரசாயனங்கள் இல்லாத வாசனை திரவியங்கள் நல்லது. கடைகளில் குறைந்த விலைகளில் கிடைக்கிறது என ரசாயனங்கள் குறித்த புரிதல் இன்றி வாசனை திரவியங்களை வாங்கி பயன்படுத்தினால், தோல் சார்ந்த பிரச்சனைகளும் கூடுதலாக ஏற்படலாம்.

குறிப்பு: மேற்கூறிய அறிகுறிகள் / தகவல்கள் பொதுவானவையே. உங்களுக்கு அதுசார்ந்த உடல்நலக்குறைவு / உடல் ஆரோக்கியம் தொடர்பாக சந்தேகம் இருப்பின், நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறலாம். அதற்கேற்ப செயல்படுங்கள்.