
பிப்ரவரி 17, சென்னை (Chennai News): செல்லப்பிராணிகள் வளர்க்கப் பிடிக்காதவர்கள் பலருக்கும் வீட்டில் மீன்களை மட்டும் வளர்க்க பிடிக்கும். காரணம் அது அழகாகவும் பார்ப்பதற்கு மன அமைதியை தருவதாகவும் இருப்பதே. ஒருசிலர் வீட்டில் மீன்கள் வளர்த்தால் ஐஸ்வரியம் பெருகும் என்ற நம்பிக்கையால் வளர்க்கின்றனர். எப்படி இருந்தாலும் மீன் தொட்டிகளை அலங்கரிப்பது வீட்டை அழகாக காட்ட உதவுகிறது.
பவளப்பாறை அலங்கரிப்பு:
இந்த அமைப்பை பெரிய வீடாக இருக்கும் பட்சத்தில் அமைத்தால் வீட்டின் லுக்கையே ரிச்சாக காட்டலாம். கடைகளில் செட்டாகவே இந்த தொட்டிகள் கிடைக்கின்றன. இந்த அமைப்புத் தொட்டியில் அதிக மீன்கள் இல்லாமல் குறைவான மீன்கள் இருந்தால் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். வண்ணங்கள் நிறைந்த அறையில் இதை வைப்பது மிக பொருத்தமாக இருக்கும். கடலின் நீற நிறத்தில் லைட்டிங் அமைக்கலாம். Ice Bath: பிரபலங்களின் ஐஸ் பாத்.. எவ்வாறு ஐஸ்ஸில் குளிப்பது? தவிர்க்க வேண்டியவர்கள் யார்? விபரம் உள்ளே.!
பாறை வடிவமைப்பு:
பாறை கற்களை வைத்து மீன் தொட்டியை அழகாக வடிவமைக்கலாம். மீன் தொட்டியின் அளவைப் பொருத்து சிறிய பாறைகளை அலங்கரிக்கலாம். கற்கள் வடிவமைப்பில் செடிகளை வைக்காமல் சிம்பிளாக வைக்கலாம். ரக்கர்ட் பர்சனாக இருப்பின் இந்த டிசைன் உங்களுக்கானது தான். இதில் நிறைய குட்டி மீன்கள் அல்லது இரண்டு பெரிய மீன்களுக்கு பொருத்தமான ஒன்றாக இருக்கும். பாறைகள் அனைத்தும் ஒரே வண்ணங்களாக இருக்க வேண்டும்.
கண் கவரும் தீவு வடிவமைப்பு:
தனிமையை விரும்புவோருக்கு தீவு டிசைன் பிடித்தமான தேர்வாக இருக்கும். இது பார்ப்பதற்கு அமைதியாகவும் தனிமை உணர்வையும் வெளிப்படுத்தும் விதமாக இருக்கும். வசதிக்கேற்ப தீவுகளின் அளவை வைக்கலாம். குட்டி மலைகளுடன் மரம் அல்லது செடிகள் இருப்பது போன்ற அமைப்புடன் இது காணப்படும். கடைகல் அல்லது அலுவலகங்களுக்கு வைப்பதாக இருந்தால், தீவுகளில் நிறைய வண்ணங்கள் இருப்பதாக அமைத்தால் பொருத்தமாக இருக்கும். வண்ணங்கள் நிறைய இருந்தால் பெரிய மீன் ஒன்று அல்ல்து இரண்டு போதுமானது.
வேர் அமைப்புடைய தொட்டி:
இந்த அமைப்பில் மீன் தொட்டியில் மரத்தின் வேர்கள் நீருக்கடில் ஊடுருவி வளர்வது போன்ற டிசைனில் இருக்கும். இது அடர்ந்த காடுகளின் ஓடும் ஆற்றின் கீழ் சிறிய கற்களில் வேர்கள் பரவி தெளிவான நீராக இருப்பதைப் போன்று அமைக்கப்படுவதால் காடு பிரியர்களுக்கு ஏற்றதாக இருக்கும். இதில் மீன்கள் அங்கும் இங்கும் செல்வதைப் பார்க்கையில் உண்மையான காட்டில் இருப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்தும்.
செடிகளில் அலங்கரிப்பு:
வீட்டிற்கு அழகான பசுமையான உணர்வை அதிகரிக்க விரும்பினால், இந்த டிசைன் மீன் தொட்டிகளை வைக்கலாம். புற்கள், கொடிகள், சிறிய மரங்கள், செடிகள் போன்றவற்றை இதில் வைத்து டெகரேட் செய்யலாம். ஆனால் இது போன்ற தொட்டிகள் மற்றதை விட அதிகம் கவனம் செலுத்த வேண்டியவைகளாகும். ஏனெனில் செடிகளை அவ்வப்போது எடுத்து மாற்றாமல் விட்டால் அதிகமாக வளர்ந்து விட வாய்ப்பிருக்கிறது.
சிலைதொட்டிகள்:
பொதுவாகவே மீன்கள் நீந்துவதை பார்த்தால் மன அமைதி கிடைக்கும் என்பார்கள். அதிலும் பிடித்தமான சிலைகளை வைத்து அதற்கு ஏற்ப லைட் அமைத்தால் மீன் தொட்டி மன பாரங்களை அகற்றிவிடும். பிடித்தமான கடவுள் சிலைகள் அல்லது பொம்மை சிலைகள், கோவில் கோபுரங்கள், கலைநயமிக்க மனித சிலைகள் கண்களைக் கொள்ளை கொள்ளும். புத்தரின் சிலையே பெரும்பாளானோரின் விருப்பத் தேர்வாக உள்ளது.
இவைகள் மட்டுமின்றி, மீன் தொட்டிகள் இடத்தை பொருத்து பல வடிவங்களில் அமைத்து அதில் பிடித்த டிசைனில் வடிவமைக்கலாம். மீன்களுக்கான சிறுநகரங்கள், ஹாரர் டிசைன், விளையாட்டு மைதானம், அக்கால கிராம், பருவ காலத்திற்கேற்ப வீடு அமைப்பு போன்ற பல டிசைன்களின் மீன் தொட்டிகள் அமைக்கலாம்.