Winter Face Problems (Photo Credit: Pixabay)

மார்ச் 07, சென்னை (Chennai News): கோடைகாலத்தில் சருமத்தை பாதுகப்பது மிக அவசியம். இந்த பருவத்தில் தோல் அதிக வெப்பத்தின் காரணமாக ஈரப்பதத்தை இழந்து வறட்சி அடைகிறது. இதனால் விரைவிலேயே தோல் சுருக்கமடைந்து விடுகிறது. மாய்ஸ்சுரைசர்கள் பயன்படுத்தி எப்போதும் ஈரப்பதத்தை தக்க வைக்கலாம். இந்த மாய்ஸ்சுரைசர்களை சுலபமாக வீட்டில் தயாரிக்கலாம்.

மிருதுவான மாய்ஸ்சுரைசர்:

தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாகக் கலந்துகொண்டு முகம், கழுத்து மற்றும் கைகளில் தடவவேண்டும். 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். இது சருமத்துக்கு ஈரப்பதத்தைக் கொடுத்து அதை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும். தேன் முகப்பருக்களை நீக்கி சருமத்தை தெளிவாக மாற்றுகிறது. தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக ஆலிவ் எண்ணெய்யையும் பயன்படுத்தலாம்.

காய்ச்சி ஆறவைத்த பாலில் இருந்து உருவாகும் 'பாலாடை' (பிரஷ் கிரீம்) சிறந்த மாய்ஸ்சுரைசிங் பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த பாலாடை ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எடுத்து அதில் பழுத்த வாழைப்பழத்தை நன்றாக மசித்து சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை மிருதுவான பசை போல கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான தண்ணீரில் சுத்தமான துணியை நனைத்து முகத்தை துடைக்க வேண்டும். பாலாடை மற்றும் வாழைப்பழம் சேர்ந்த கலவை சருமத்துக்கு ஈரப்பதத்தை மட்டுமில்லாமல் தேவையான ஊட்டச்சத்துக்களையும் தருகிறது. பாலாடை மட்டும் கூட அப்படியே பயன்படுத்தலாம்.

ஒரு பப்பாளிப் பழத்துண்டை பொடியாக நறுக்கி அதை கூழாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதில் சிறிது வெண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி நன்றாக சுத்தம் செய்த பின், பப்பாளி கூழை பஞ்சில் நனைத்து முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் தடவவும். பப்பாளியில் சருமத்தைப் பொலிவாக்குகிறது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள், சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் பராமரிக்க உதவுகிறது. மேலும் பப்பாளி, சூரிய ஒளியால் ஏற்படும் தோல் அழற்சியை குணப்படுத்தி வறட்சியை நீக்கும். First Night Tips: தாம்பத்ய வாழ்க்கை இனிக்க.. மெல்ல மெல்ல தொடுங்கள்...!

2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 டீஸ்பூன் க்ரீன் டீ கலந்துக்கொள்ள வேண்டும். முகத்தை நன்றாக சுத்தம் செய்து, இந்த மாய்ஸ்சரைசரை அப்ளே செய்ய வேண்டும். இது முகத்தை எண்ணெய்பசை மற்றும் வறட்சியிலிருந்து பாதுகாத்து பளபளப்பாக வைக்கிறது.

1 டேபிள் ஸ்பூன் தேன், 2 டேபிள் ஸ்பூன் அரைத்த ஓட்ஸ் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்ந்து பேஸ்ட் போன்று கலக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். இது முகம்,கழுத்து, கை களில் தேய்த்து 20 நிமிடத்திற்கு உலர விட்டு, வெதுவெதுப்பான நீரில் மழுவ வேண்டும். ஓட்ஸ் நீண்ட நேரத்திற்கு ஈரப்பதத்தை சருமத்திற்கு அளிக்கிறது. மேலும் முகத்தில் உள்ள எண்ணெய் திட்டுக்கள், இறந்த செல்களை நீக்கி பொலிவாக வைக்கிறது.

வீட்டில் தயாரித்த மாய்ஸ்சுரைசரை சருமத்தில் தடவினால் சுமார் 10 முதல் 15 நிமிடங்களுக்கு அப்படியே விட்டுவிட்டு,பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி வர சருமத்தில் உள்ள வறட்சி நீங்கி, மிருதுவாக மாற்றும். மேல் கூறிய மாய்ஸ்சுரைசர்களைத் தவிர, ஆலிவ் எண்ணெய், ஷியா வெண்ணெய், கற்றாழை ஜெல், அவகேடோ பழம், சூரியகாந்தி எண்ணெய், பாதாம் எண்ணெய், வெள்ளரி காய், மோர், தயிர், விளக்கெண்ணெய், ரோஜாவில் இருந்து தயாரிக்கப்பட்ட பன்னீர் ஆகியவற்றையும் மாய்ஸ்சுரைசர்களாக உபயோகிக்கலாம்.