
மார்ச் 03, சென்னை (Chennai News): தொடக்கத்தில் குறைவான முதலீட்டில் பயிர்களை தேர்ந்தெடுத்து விவசாயத் தொழிலை செய்யலாம். பயிரிடும் பகுதியின் பருவனிலை, சந்தை தேவைகளுக்கு ஏற்ப பயிர்களை குறைந்த முதலீட்டில் விவசாயம் செய்து அதிக லாபம் பெறலாம். இதனால் விவசாயிகளுக்கு நிதி ஆபத்து ஏற்படாது. சில பயிர்கள் குறைவான முதலீட்டில் எளிமையாக விவசாயம் செய்து அதிக லாபம் இட்டும் பயிர்கள் உள்ளன அவைகளில் சில.
முருங்கை
தமிழகத்தில் அதிகாளவில் சாகுபடி செய்யும் பயிராக முருங்கை இருக்கிறது. இதன் சர்வதேச தேவை அதிகரிப்பதால் முருங்கை விவசாயம் அதிகரிக்கிறது. மேலும் இது தமிழக வெப்ப சூழ்னிலைக்கு ஏற்ப நன்கு வளரக்கூடியது.மக்களிடையே முருங்கையின் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களுக்கு நன்கு வரவேற்புள்ளது. முருங்கை விவசாயம் செய்ய முதலிடுவதன் மூலம் நல்ல லாபத்தை பெற முடியும். First Night Tips: தாம்பத்ய வாழ்க்கை இனிக்க.. மெல்ல மெல்ல தொடுங்கள்...!
பப்பாளி
பப்பாளி சாகுபடியானது விவசாயிகளுக்கு, மற்ற பழப்பயிர்களை விட குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்ட சிறந்த வழியாக உள்ளது. இதில் வருடம் முழுவதும் அறுவடை செய்ய முடியும். பழங்களை உள்ளூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யலாம். அங்கு பப்பாளிக்கு நிலையான தேவை இருந்துகொண்டே இருக்கிறது. விவசாயிகளுக்கு பப்பாளி பழத்திலிருந்து நிலையான லாபம் பெறலாம்.
கறிவேப்பிலை
கறிவேப்பிலை தென்னிந்திய உணவு வகைகளில் இன்றியமையாத ஒரு பொருளாகும், இது தமிழ்நாட்டில் அதிக தேவையுள்ள பயிராக உள்ளது. இந்த பயிருக்கு குறைந்த முதலீடு தேவைப்படுகிறது மற்றும் சிறிய இடங்களில் பயிரிடலாம், குறைந்த நில வளம் உள்ள விவசாயிகளுக்கு ஏற்றது. கூடுதலாக, கறிவேப்பிலை நீண்ட அறுவடை காலத்தைக் கொண்டுள்ளது, இது ஆண்டு முழுவதும் நிலையான வருமானத்தை உறுதி செய்கிறது.
மைக்ரோகிரீன்ஸ்
வெந்தயம், கடுகு,பட்டாணி, முள்ளங்கி, பீட்ரூட், முட்டைகோஸ் போன்றவைஅக்ளை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் இந்த மைக்ரோகீரைகள் தற்போது அதிக மக்களால் வாங்கப்படுகிறது. குரைவான முதலீடு மட்டுமின்றி குறுகிய காலத்தில் அறுவடை செய்து லாபம் பார்க்கவும் செய்யலாம். இந்த விவசாயத்திற்கு சரியான சந்தைப்படுத்துதல் மட்டுமே தேவை. அதிகமாக ஆர்டர்கள் வந்தால் அதிகப்படுத்திக் கொள்ளலாம். அதிக ஊட்டசத்துக்கல் உள்ள இந்த மைக்ரோகிரீன்ஸ் விவசாயம் செய்யம் அதிக அளவில் நிலம் கூடத் தேவைப்படாது.
மூலிகை மர்றும் நறுமண செடிகள்
துளசி செடி, பிரண்டை, கற்றாழை, எலுமிச்சை போன்றவைகள் மருத்துவ மற்றும் நறுமண தவரங்களாக சாகுபடி செய்யப்படுகிறது. அழகு சாதன பொருட்கள் தயாரிப்பிற்காகவும், மருத்துவ தேவைகளுக்காகவும் உற்பத்தி செய்யப்படும் செடிகளுக்கு அதிக மதிப்புள்ளது. அதனால் இம்மாதிரியான செடிகள், குறைவான முதலீட்டில் உற்பத்தி செய்து தொடர்ச்சியாக அதிக லாபம் ஈட்ட முடியும்.
இயற்கை காய்கறிகள்
இயற்கை விதைகளையும், உரங்களைப் பயன்படுத்தி உற்பஹ்த்டி செய்யப்படும் காய்களுக்கு மக்களிடையே எப்போதும் தனி மதிப்பு உண்டு. மேலும் இயற்கை வேளாண்மையில் குறைந்த செலவில் அதிக உற்பத்தியை தரமானதாக கொடுக்க முடியும். கத்தரிக்காய், தக்காளி, பீன்ஸ், வெண்டை என அனைத்து காய்களையும் ஆர்கானிக்காக தயாரித்து சந்தைப்படுத்தலாம். இரசாயன முறையில் உற்பத்தி செய்த காய்கறிகளை விட இதில் அதிக லாபம் கிடைக்கிறது. பராமரிப்பு மட்டும் அதிக அளவில் இதில் தேவைப்படும்.