
பிப்ரவரி 24, சென்னை (Chennai News): பெண்களுக்கு இருக்கும் பல கவலையில் முக்கியமான கவலையே முடிக்கொட்டுவது தான். முடி அடர்த்தியாக நீளமாக வளர வேண்டும் என்று நினைப்பெதெல்லாம் மாறி, இப்போது இருக்கும் முடி கொட்டாமால் இருக்க வேண்டும் என்றே பலரும் நினைக்கின்றனர். முதலில் முடி கொட்டுவதற்கு முக்கிய காரணம் முடியில் உள்ள ஈரத்தன்மை குறைவது தான். அதனுடன் ஊட்டச்சத்து குறைவது, மாசு படிவதாலும் முடி கொட்டும். முடி வறட்சி ஏற்படுகையில் முறையாக சீவி பிடித்த ஹேர் ஸ்டைலை செய்ய முடியாது. அதனால் பலரும் பார்லர் சென்று ஹேர் ஸ்மூத்னிங் செய்வர். ஆனால் இதை அடிக்கடி செய்வதால் முடி நாளடைவில் பாதிப்படையக்கூடும். அதனால் வீட்டிலேயே எளிமையான பொருட்களை வைத்து முடியை இயற்கையாக மென்மையாக மாற்ற முடியும். Bridal Skincare: மணநாளில் ஜொலிக்க இவைகளை பின்பற்றுங்கள்.. அசத்தல் டிப்ஸ் இதோ.!
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு 1
கான்பிளவர் மாவு 2 ஸ்பூன்
பழுத்த வாழைப்பழம் 2
உருளைக்கிழங்குகளை தோல் நீக்கி சிறியத் துண்டுகளாக நறுக்கி, கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அரைத்து வைத்து கொள்ள வேண்டும். பின் இதை காட்டன் துணியால் உருளைகிழங்கு சாறுகளைப் பிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இதை கான்பிளவர் மாவில் போட்டு கலந்து வைத்துக் கொள்ளவும். இதை மிதமான அடுப்பில் வைத்து சூடு செய்து கீரிம் போல வர வைக்க வேண்டும். அதை எடுத்து 15 நிமிடங்களுக்கு ஆற விட வேண்டும்.
தோல் நீக்கிய வாழைப்பழத்தினை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பேஸ்டை அந்த கலவையில் கலந்துஸ்மூத்னிங் கிரீமைத் தயார் செய்ய வேண்டும்.
அப்ளை செய்யும் முறை:
இதை முடிக்கு அப்ளே செய்வதற்கு முன், தலையில் தேங்காய் எண்ணெயை தடவி உறவிட வேண்டும். பின் சிக்குகளை நீக்கி இந்த கிரீமை கொஞ்சம் கொஞ்சமாக முடியின் வேரிலிருந்து நுனி வரை அப்ளே செய்ய வேண்டும். 15 நிமிடத்திற்கு பின் முடியை அலசி விட வேண்டும். இது முடிக்கு மென்மை தன்மையை அளிக்கும். இந்த மென்மைத் தன்மை 3 முதல் 4 நாட்கள் வரை இருக்கும். முடி வறட்சியாக காணப்படும் போதெல்லாம் இதை செய்து கொள்ளலாம். மேலும் முடி கொட்டுவதும் குறையும்.