Eyebrow (Photo Credit: Pixabay)

ஜனவரி 14, சென்னை (Chennai): பெண்களின் முகத்திற்கு அழகு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பது புருவம் தான். கண்கள் அழகாக இருந்தும் புருவம் அடர்த்தியாக இல்லையெனில் முகத்தின் அழகு சற்று குறைவாக தெரியும். செயற்கையாக ஐ ப்ஃரோ பென்சில் போட்டால் அழகாக தெரிவார்கள் சிலர் இதற்காக ட்ரீட்மெண்டெல்லாம் செய்வார்கள். வீட்டிலேயே சில எளிய முறைகள் மூலம் புருவங்களை இயற்கையாக (Eyebrow Growth Tips) வளர்க்க முடியும். Health Tips: எந்நேரமும் உட்கார்ந்தபடியே வேலையா? உங்களுக்கான அசத்தல் டிப்ஸ் இதோ.!

புருவம் அடர்த்தியாக வளர:

  • தினமும் இரவில் தூங்குவதற்கு முன் விளக்கெண்ணையை புருவத்தில் தடவி 2 - 3 நிமிடத்திற்கு மசாஜ் செய்து வந்தால் புருவம் அடர்த்தியாக வளரும்.
  • ஐ ப்ஃரோ பென்சிலை விளக்கெண்ணையில் தொட்டு புருவத்தில் வரைந்து வந்தால் அதே வடிவத்திற்கு புருவம் வளரும்.
  • தேங்காய் எண்ணெயை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சிறிது சூடு செய்து இளஞ்சூட்டிலேயே புருவத்தில் மசாஜ் செய்து வரலாம்.
  • 2 சின்ன வெங்காயத்தை தட்டி சாறு எடுத்துக் கொள்ளவும். அந்த சாற்றில் ஒரு பஞ்சை நனைத்து புருவத்தில் தடவி வர விரைவிலேயே முடிவளர்வதைக் காணலாம்.
  • கற்றாழை சதைப் பகுதியை புருவத்தில் காலை மாலை என தடவி வந்தால் புருவ முடிக்கு பலமளித்து அடர்த்தியாக வளரும்.
  • புருவத்திற்காகவே கடைகளில் கிடைக்கும் சீரம் வாங்கிப் பயன்படுத்தலாம். வறட்சி ஏற்படாமல் பார்த்துக் கொண்டாலே போதும் புருவ முடி வளர ஆரம்பிக்கும். இவை அனைத்தையும் தொடர்ச்சியாக செய்தால் தான் நல்ல பலன் கிடைக்கும்.