
கற்றாழை ஜெல் தயாரித்தல்:
கற்றாழை செடியில் இருந்து அதன் பெரிய மாடல்களை வெட்டி எடுக்க வேண்டும். இதிலிருந்து மஞ்சள் நிற திரவம் வெளிவரும். இதில் அலாயின் காம்பவுண்ட் என்னும் நச்சு இருக்கும். இதை முழுவதும் வெளியேற்ற வேண்டும். அதற்கு முதலில் வெட்டி எடுத்த கற்றாழை மடல்களை பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு மணி நேரத்திற்கு ஊற போட்டு வைக்க வேண்டும். பின் அதை வடித்து எடுத்து மீண்டும் ஒருமுறை அரை மணி நேரத்திற்கு தண்ணீரில் போட்டு சுத்தமாக கழுவ வேண்டும். பின்னர் மடல்களின் அடிப்பகுதியில் இருந்து ஒரு அங்குல அளவு மற்றும் இரண்டு ஓரப்பகுதிகளையும் வெட்டி நீக்க வேண்டும். பின் மடல்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். இதை குறுக்காக வெட்டி உள்ளிருக்கும் சதைப்பகுதியை தனியாக ஸ்பூன் மூலம் சுரண்டி எடுத்து வைக்க வேண்டும். இந்த ஜெல் முழுவதையும் மிக்ஸியில் தனியாக தண்ணீர் ஊற்றாமல் அரைக்க, நுரையுடன் கூடிய கெட்டியான கற்றாழை ஜெல் கிடைக்கும். Uppu Kolukkattai Recipe: சுவையான உப்பு கொழுக்கட்டை செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!
தயாரித்த கற்றாழை ஜெல்லை, ஐஸ் டிரேக்களில் ஊற்றி, ஃப்ரீஸரில் வைத்து ஐஸ் கட்டிகளாக மாற்றிக் கொண்டு, தேவைப்படும் போது ஐஸ் கட்டிகளாக இருக்கும் கற்றாழை ஜெல்லை எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதை ஒரு வருட காலம் வரை ஸ்டோர் செய்து உபயோகப்படுத்தலாம்.
மற்றொரு முறை: வைட்டமின் சி 8 மில்லிகிராம் மாத்திரையை நன்றாக தூளாக்கிக் கொள்ளவும். அதை 1லிட்டர் தயாரித்து வைத்த கற்றாழை ஜெல்லுடன் கலந்து கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைக்கலாம். இதனை 6 முதல் 8 மாதங்கள் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பயன்படுத்தலாம்.
வணிக ரீதியாக ஜெல் தயாரிக்க, 1 ¼ கப் டிஸ்டில்டு வாட்டரை கொதிக்க வைத்து அதில் 3 ½ ஸ்பூன் ஜெலட்டின் கலந்து கரைந்ததும் ஆறவைக்க வேண்டும். பிறகு அதில் ஒரு கப் கற்றாழை ஜெல்லை கலக்க வேண்டும். இந்த கலவையை ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும் என்றில்லை. இதை 6 மாதம் முதல் 8 மாதங்கள் வரை பயன்படுத்தலாம். இதை காற்று புகாத பாட்டிலில் வைத்து சந்தைப்படுத்தலாம். முதலில் இதை சிறிய அளவில் தயாரித்து பழகி விட்டு பின்பு வியாபாரம் செய்யத் தொடங்கலாம்.