ஜனவரி 11, சென்னை (Chennai): தனிப்பட்ட வாழ்க்கைமுறை, வேலை சூழல் என வேலை வாழ்க்கை என்பது அதிகரித்து, தனிப்பட்ட வாழ்க்கை குறுகி வருகிறது. இது கார்ப்பரேட் கலாச்சாரத்தின் வெளிப்பாடாக இருந்தாலும், உயர்பொறுப்பில் இருப்பவர்கள் நேரத்திற்கு பணிகளை முடித்து புறப்பட்டுவிடுகின்றனர். ஆனால், அவர்களின் உண்மையான உழைப்புக்கு காரணமாக இருக்கும் கீழ்நிலைப்பணியாளர்களின் நிலை கவலைக்கிடம் தான்.
வேளையில் மும்மரம்:
எந்த நேரமும் வேலை-வேலை என இருப்போரின் ஆரோக்கியம் முற்றிலுமாக சீர்குலையும் அபாயம் என்பது இன்றளவில் அதிகரித்துள்ளது. இதனால் இவரது வாழ்க்கைமுறை இளம் வயதினரின் இளமை, உடல் நலனை உறிஞ்சுகிறது. தங்களின் வேலை நாட்களில் எழுந்திருந்து 5 நிமிட இடைவெளியில் சிறுநீர் கழிக்க, சாப்பிட எனக்கூட நேரமில்லாமல், நாள் முழுவதும் நாற்காலியோடு அமர்ந்து பலரும் வேலை பார்த்து வருகிறார்கள்.
செரிமான கோளாறு உண்டாகும்.
இவ்வாறான விஷயம் மனம் மற்றும் உடல் ரீதியான சுரண்டலுக்கு வழிவகை செய்கிறது. இதனால் வயிற்றிலும் கோளாறுகள் உண்டாகிறது. நாள்முழுவதும் நாற்காலியில் இருந்து வேலை பார்ப்பதால், வயிறு உறுப்புக்கள் அழுதப்படுகிறது. இதனால் வீக்கம், வாயு, மலச்சிக்கல், தாமதமான குடல் இயக்கம் போன்றவை உண்டாகிறது. எந்நேரமும் உட்கார்ந்து பணியாற்றும் காரணத்தால் குடலுக்குள் செல்ல வேண்டிய இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. செரிமான உறுப்பில் அழுத்தம் அதிகரிக்கிறது. Sivappu Aval Nanmaigal: சிவப்பு அவல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.. அசத்தல் தகவல் இதோ.!
செரிமானம் செயலிழப்படலாம்:
சீரில்லாமல் உட்கார்ந்து வேலை பார்க்கும் முறைகள் உடலின் உள்ளுறுப்புகளை சீர்குலைக்கும், செரிமானத்தை மந்தப்படுத்தும், வாயு குவிய காரணமாக அமையும். இதனால் மலச்சிக்கல், குடல் அலர்ஜி நோய்களும் உண்டாகும். மேலும், பாக்டீரியா சமநிலையை குடல் பகுதியில் ஏற்படுத்தி, செரிமான செயலிழப்புக்கு வழிவகை செய்யும். உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்கள் கட்டுப்படுத்தப்பட்டு, உணவில் இருந்து ஊட்டச்சத்து பெறுவதில் சிக்கல் உண்டாகும்.
இரத்த ஓட்டம் குறையும்:
குடலில் இருக்கும் நன்மை தரும் பாக்டீரியா சமநிலையை இழந்தால் செரிமானம் மந்தப்படும். கழிவுகளை அகற்றுதல் கடினமாகி, இரத்த ஓட்டம் குறையும், மேலும், வயிற்றில் அழுத்தம் அதிகமாகி மலச்சிக்கல் மோசமாகும். சர்க்கரை உணவுகள், மனரீதியான அழுத்தம், நீரிழப்பு, உடற்பயிற்சி இல்லாதது போன்றவையும் குடலின் ஆரோக்கியத்தை பாதிக்க வைக்கும்.
சில ஆலோசனைகள்:
குடலின் ஆரோக்கியம் பாதிக்க தொடங்கினால் எதிர்ப்பு சக்தி, ஹார்மோன், மனநல வாழ்வு, எடை ஒழுங்கு என பல்வேறு விஷயங்கள் பாதிப்பை எதிர்கொள்ளும். இந்த பிரச்சனைகளை தவிர்க்க உடற்பயிற்சி, எளிதில் செரிக்கக்கூடிய உணவுகள், அவ்வப்போது இடைவேளை எடுத்து நடப்பது, உடலுக்கு தேவையான நீர் குடிப்பது முக்கியம். மேலும், நார்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நல்ல தூக்கம், வழக்கமான வேலை, மிதமான உடற்பயிற்சி நன்மை தரும்.
குறிப்பு: மேற்கூறிய அறிகுறிகள் / தகவல்கள் பொதுவானவையே. உங்களுக்கு அதுசார்ந்த உடல்நலக்குறைவு / உடல் ஆரோக்கியம் தொடர்பாக சந்தேகம் இருப்பின், மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறலாம். அவரின் அறிவுறுத்தலின் பேரில் தேவைப்பட்டால் உடல் பரிசோதனை செய்து, மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப செயல்படலாம்.