ASTRO (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 19, சென்னை (Chennai News): சனி பெயர்ச்சி 29 மார்ச் 2025 அன்று மீன ராசியில் சனி பூரட்டாதி நான்காம் பாத பிரவேசத்தில் தொடங்கி , 17 மாறுபட்ட நட்சத்திர சாரங்களில் சனி சஞ்சாரம் நிகழ்கிறது சனி பகவான் மீன ராசியில் ஜூன் 3 , 2027 வரை சஞ்சாரம் செய்கிறார். இந்த கால கட்டத்தில் அதாவது 29 மார்ச் 2025 முதல் ஜூன் 3 , 2027 வரை உள்ள காலத்தில் சனி மீனத்தில் சஞ்சாரம் செய்யும் காலத்தில் கும்பம் ராசியில் பிறந்தவர்களுக்கான சனி பெயர்ச்சி பலன்கள் பார்க்கலாம்.

கும்பம் சனி பெயர்ச்சி பலன்கள் (Kumbam Sani Peyarchi Palan 2025):

கடன்,நோய், வம்பு,தொழில் முடக்கம் வேலையில் நிம்மதி இல்லாத நிலை உயர் அதிகாரிகளுடன் பிரச்சனை ஒரு சிலருக்கு வேலை இழப்பு குடும்பத்தில் குழப்பங்கள் முயற்சிகளில் தோல்வி போன்ற அசுப பலன்கள் அடைந்து வந்திருப்பீர்கள். தற்போது இரண்டாம் இடமான மீன ராசிக்கு வருவதால் ஜென்ம சனி தாக்கத்திலிருந்து விடுபடுகிறீர்கள். பழைய நிலையில் இருந்து புதிய மாற்றங்களை சந்தித்து இருக்கிறீர்கள். தடைபட்டிருந்த மகன், மகள் திருமணம் நடைபெறும் பூர்வீகத்தில் இருந்த சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் விலகும் கடன் பிரச்சினை படிப்படியாக குறையும் தன்னம்பிக்கையும், தைரியமும் உண்டாகும் வேலை இழந்தவர்களுக்கு சம்பள உயர்வுடன் புதிய வேலையில் அமர்வார்கள். கையில் பணப்புழக்கம் உண்டாகும் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை இரவு நேர பயணங்களை தவிர்ப்பது நல்லது ஏழரைச் சனி காலம் என்பது நம்மை பக்குவப்படுத்தி ஒரு அனுபவத்தை கொடுத்து அதன் மூலம் நேர்மையான வழிகளில் செல்ல வைப்பார் சனி பகவான். Sani Peyarchi Palan 2025: சனிப் பெயர்ச்சி 2025: தனுசு ராசிக்கு ஏழரை சனி எப்படி இருக்கப் போகுது தெரியுமா? விபரம் உள்ளே.!

தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூடுமானவரை புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது புதிய முதலீடுகள் தவிர்க்க வேண்டும் அறிமுகம் இல்லாத நபர்களிடம் நம்ப வேண்டாம் ஏமாற்றப்படலாம். கணவன், மனைவி குடும்பத்தில் உள்ளவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது தனக்கு கீழ் உள்ளவர்கள் தானே என்று யாரையும் அலட்சியம் செய்ய வேண்டாம். ஏப்ரல் மாதம் ஜென்ம ராசிக்கு ராகு வருவதால் பிரச்சனைகள் இன்னும் விலகவில்லையே என்று கவலை ஏற்படும் மனதளவில் குழப்பமான சிந்தனைகள் ஏற்படும். சரி என்று நினைத்து தவறான முடிவுகளை எடுப்பீர்கள்.இரவில் உறக்கம் வராமல் அவதிப்படுவீர்கள். முக்கியமான முடிவுகளை வீட்டில் உள்ளவர்களிடம் கலந்து ஆலோசித்து எடுப்பது நல்லது. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் தேர்வுகளில் வெற்றி அடையலாம். மே மாதம் குரு பெயர்ச்சிக்கு பிறகு எல்லாவற்றிலும் மாற்றங்கள் ஏற்படும். இந்த ஏழரைச் சனி காலம் நல்லவை,தீயவை இரண்டிலும் ஒரு அனுபவத்தை கொடுத்து அதன் மூலம் எதிர்காலம் பிரகாசமாக இருக்க சனி பகவான் அருள் புரிவார்.