ஜனவரி 14, சென்னை (Health Tips): ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தாலும் சரியான பராமரிப்பின்மையாலும், இளம் வயதிலேயே முடி உதிர்வு, முடி உடைதல், வளர்ச்சி தடைபடுதல், அடர்த்தியின்மை, நிறமாற்றம் என அனைத்தும் ஏற்படுகிறது. தேங்காய் எண்ணெய் தேய்ப்பதால் மட்டும் முடி வளராது. தலைக்கு மசாஜ் செய்வது, முடி வறட்சி ஏற்படாமல் இருப்பது, முடியை எப்போதும் ஈரப்பதத்துடன் வைப்பது, அழுக்கின்றியும் இருப்பதே ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு (Hair Care) வழிவகுக்கும்.
அதிலும் இளம் பெண்கள் தங்களுக்கு பிடித்த விதத்திலும், ஆடைகளுக்கும் ஏற்ற விதத்திலும் ஹெர் ஸ்டைல்கள் செய்வது கொள்கின்றனர். அதிக கெமிக்கல்கல், ஹீட் தலையில் அதிகமாக பயன்படுத்துவதால் முடிக்கு பாதிப்புகள் ஏற்படுகிறது. அழகாக முடியை அலங்கரிப்பதில் காட்டும் அக்கறையை முடியை பராமரிப்பதில் காட்ட வேண்டும் என அழகு கலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். முடி வகைக்கு ஏற்ப ஷாம்பு, கண்டிசனர், சீரம், ஹேர் ஆயில் உள்ளது. இவைகள் முடிகளை பராமரிக்கும் பொருட்களே அலங்காரப் பொருட்கல் அல்ல. Paanai Pongal Recipe: பாரம்பரிய மிக்க மண்பானை பொங்கல் செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!
ஹேர் ஆயில் (Hair Oil):
ஹேர் ஆயில்கள் அனைவரும் பயன்படுத்தும் தேங்காய், பாதாம், ஆலிவ், கடுகு, விளக்கெண்ணெய் போன்றவை ஹேர் ஆயில்கள் ஆகும். சில ஹேர் ஆயில்கள் பிரேத்தியாகமாக முடிகளுக்கு தயரிக்கப்படுகின்றனர். ஹேர் ஆயில்கள் முடியின் வேர்கால் பயன்படுத்தப்படுவை. இந்த எண்ணெய்கள் தலையில் தேய்த்து முடிகளை மசாஜ் செய்து ரிலாக்ஸ் அடையவைப்பதாகும். இது முடியின் வளர்ச்சியைத் தூண்டும்.
ஷாம்பு (Shampoo):
ஷாம்புகள் தலையில் உள்ள தூசி, அழுக்குகள் நீக்குவதற்கு பயன்படுத்தப்படுபவை. தலைக்கு அதிக கெமிக்கல் இல்லாத ஷாம்புகள் பயன்படுத்த வேண்டும். இது வேர்காளில் நேரடியாக படுவதால் கெமிக்கல் இருக்கும் ஷாம்புகள் பயன்படுத்தக்கூடாது. மேலும் அடிக்கடி ஷாம்பு பிராண்டுகளை மாற்றக் கூடாது. இது முடிக்கு பாதிப்பு ஏற்படுத்தும். மேலும் தலைக்கு ஹேர் பேக், அல்லது எண்ணெய் அதிகமாக தேய்த்திருந்தால் அதிக ஷாம்புவையும் போட்டு தேய்ப்பர். இது முடியை வலுவிலுக்க வைத்துவிடும்.
கண்டிஷனர் (Conditioner):
ஷாம்புகள் அனைவரும் பயன்படுத்துகின்றனர். ஆனால் கண்டிஷனர் பயன்படுத்துபவர்கள் குறைவானவர்களே. ஆனால் தலைக்கு ஷாம்பு மட்டும் பயன்படுத்துவது முடிகளை சேதமாக்கும். ஷாம்பு பயன்படுத்திய பின்னர் 2ஆவது ஸ்டாபாக கண்டிஷர் பயன்படுத்துவது மட்டுமே முடியை பாதுகாக்கும். கண்டிஷனர், முடி உடைவதை தடுப்பதுடன், முடிக்கு ஊட்டசத்துக்களை வழங்கிறது. அதனுடம் முடி வளர்ச்சிக்கும் ஊக்கிவிக்கிறது. மேலும் முடி அழுக்குகளிடமிருந்தும், வெயில் இடமிருந்தும் பாதுகாக்கிறது. Jallikattu 2025: உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள்.. எங்கே, எப்போது நடைபெறும்? விபரம் உள்ளே.!
சீரம் (Serum):
முடிக்கு சீரம் பயன்படுத்துவது முடியை வறட்சியடையாமல் வைத்திருக்கும். முடியை வலுவானதாக மாற்றும். இது முடியின் மட்டும் பயன்படுத்த வேண்டியதாகும். அவரவரின் முடியின் வகையை மாற்றாமல் பளபளப்பாக அழகாக வைக்கும். மேலும் முடியில் சிக்கு இல்லாமலும் மற்றும் பரட்டையாக இல்லாமலும் வைத்திருக்கும். மேலும் சீரம், தூசுகள் மற்றும் கெமிக்கல்களிடமிருந்து பாதுகாக்கும். சீரம்கள் தினமும் பயன்படுத்துவது ஆரோக்கியமாக வைக்கும். முடி சுத்தமாகவும் லேசான ஈரம் இருக்கும் போது சீரம் பயன்படுத்த வேண்டும்.
முடிகளில் பயன்படுத்தப்படும் ஷாம்பு, கண்டிஷனர், சீரம் ஆகியவை உங்கள் முடிகளுக்கு ஏற்றதா என ஆராய்ந்து கொருகளை வாங்கிப் பயன்படுத்தவும். ஒவ்வொரு முடியின் வகைக்கும், தன்மைக்கும் ஏற்ப புராடெக்டுகள் கிடைக்கின்றன.