![](https://static.latestly.com/File-upload-v3/o/p/4NqciJt1B8gIsZFwY23kB10uvfvtKQdVvjUutMrKYPj3e6kq5VzARfRWM---ndIi/n/bmd8qrbo34g7/b/File-upload-v3/o/upload-test-dev/uploads/images/2025/02/pedicure.jpg?width=380&height=214)
பிப்ரவரி 14, சென்னை (Chennai News): பாதங்களில் ஏற்படும் வெடிப்புகளை சரி செய்ய, ஆயிரக்கணக்கில் செலவு செய்து ப்யூட்டி பார்லர் சென்று பராமரிக்க வேண்டும் என்றெல்லாம் இல்லை. என்றாவது ஒரு நாள் மட்டும் பார்லர் செல்லலாம். மற்ற நேரங்களில் வீட்டிலேயே எளிய முறையில் பெடி க்யூர் செய்து பாதங்களை அழகாக பராமரிக்கலாம்.
இயற்கையான முறையில் பெடிக்யூர்:
பெடிக்யூர் செய்வதற்கு முன் கால்களைக் கழுவி சுத்தமாக வைக்க வேண்டும். பின்பு நெயில் பாலிஷ் ரிமூவர் மூலம் நகங்களிலுள்ள பழைய நெயில் பாலிசை அகற்றி, நகங்களை சீராக வெட்டிக்கொள்ள வேண்டும். நகங்களின் ஓரங்களில் ஆழமாக வெட்டாமல் வலி ஏற்படாதவாறு வெட்ட வேண்டும். அதை நெயில் கட்டரில் உள்ள ஷேப்பர் மூலம் ஷேப் செய்யது கொள்ள வேண்டும். Sani Peyarchi Palan 2025: சனிப் பெயர்ச்சி 2025: துலாம் ராசிக்கு ஏழரை சனி எப்படி இருக்கப் போகுது தெரியுமா? விபரம் உள்ளே.!
கால்களை 10 முதல் 20 நிமிடங்களுக்கு மசாஜ் செய்து வேண்டும். இதற்கு ஒரு பெரிய பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரில், சோப்பு அல்லது பாடிவாஷ் சிறிதளவு, மற்றும் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்க்க வேண்டும். இதனுடன் கூழாங்கற்களை தண்ணீரில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் கால்களை இதனுள் வைத்து ஒரு 15- 20 நிமிடங்களுக்கு மெதுவாக அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும்.
கால்களை மசாஜ் செய்த பின், நன்கு உலர்த்திக்கொள்ள வேண்டும். பின்னர் கால் நகங்கள் மற்றும் பாதம் அடிப்பகுதியில் கடைஅக்ளில் கிடைக்கும் க்யூட்டிகல் கிரீம்களை தடவி சில நிமிடங்களுக்கு அடிப்படியே வைக்க வேண்டும். பிறகு ஸ்கரப்பைப் பயன்படுத்தி பெதுவாக தேய்து காலில் உள்ள உலந்த மற்றும் இறந்த சரும செல்களை அகற்றவேண்டும்.
மீண்டும் ஒரு முறை பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரையும், சிறிதளவு உப்பினையும் சேர்த்துக் எடுத்துக்கொள்ள வேண்டும். நீரில் பாதங்களை 10-15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். இது பாதங்களை மிருதுவாக்கும். மீண்டும் ஒரு முறை ஸ்கரப் செய்ய வேண்டும். 5 நிமிடத்திற்கு பின் சுத்தமாக துடைத்துக்கொள்ள வேண்டும். சிறிது நேரத்திற்கு லோஷன் அல்லது எண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்துக் கொள்ளவேண்டும். இதன் பின் பிடித்த நெயில் பாலிஷை அப்ளை செய்து கொள்ளலாம்.