ஜனவரி 20, சென்னை (Chennai): பெண்கள் எப்போதும் ஆடைகள், மேக் அப்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை போலவே அணிகலன்களுக்கு அளிப்பர். புதிதாக டிரஸ் ஏதாவது வாங்கினால் கையோடு அதற்கு ஏற்ப அணிகலனையும் வாங்கிவிடுவர். அந்த அணிகலனில் வளையல்கள் பெரும்பங்கு வகுக்கின்றனர். டிரெடிஷனல் வெஸ்டர்ன் என எதுவாக இருந்தாலும் வளையல்கள், ப்ரேஸ்லட்கள் கைகளை அழகாக்கும். அதனால் ஆடைகளுக்கு ஏற்ப வித விதமான டிசைன்களிலும், அளவிலும் வாங்கி வைத்திருப்போம். ஆனால் அதை பாத்திரப்படுத்தாமல் விட்டுவிடும். ஏதாவது விழாக்களுக்கு எடுத்து பயன்படுத்தி விட்டு வீட்டிற்கு வந்ததும் அனைத்தையும் அப்படியே கழட்டி எறிந்துவிட்டு டயர்டில் படுத்துவிடுவோம். ஆனால் அடுத்த முறை மீண்டும் வளையல்கள் தேவைப்படுகையில் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் அது சேதாரமயிருக்கும். இது போன்றவையைத் தடுக்கவும், செலவுகளைத் குறைக்கவும் வளையல்களை பத்திரமாக வைக்க வேண்டும்.
வளையல்களை பராமரிக்கும் வழிகள்:
வளையல்களுக்கென்று தனியாக இடம் ஒதுக்கி பாராமரிக்க வேண்டும். இரும்பு வளையல்கள், கண்ணாடி வளையல்கள் என பிரித்து சேமிக்க வேண்டும். செட்டாக இருக்கும் வளையல்களை ஒன்றாக எடுத்து வைக்க வேண்டும். தனி வளையல்களுக்கு தனித்தனி இடம் ஒதுக்க வேண்டும். அதிக விலையுள்ள மற்றும் அதிக வொர்க் உள்ள வளையல்களை துணி அல்லது மென்மையான ரிப்பனால் அதை சுற்றிப் பாதுகாப்பாக வைக்க வேண்டும். Carrot Chips Recipe: மொறு மொறுன்னு கேரட் சிப்ஸ் செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
வளையல்களை பெட்டி அல்லது அதற்கான ஸ்டாண்ட் வாங்கிப் பயன்படுத்த வேண்டும். பேங்கல் ஹோல்டர்கள் மரம், ஸ்டீல்களில் பல வடிவங்களில் கிடைக்கிறது. மார்டன், டிரெடிஷனல் டிசைன்களில் கிடைக்கிறது. கண்ணாடி வளையல்கள் அடிக்கடி எடுக்காத வளையல்களை இதில் வைத்து சேமிக்கலாம். ரெகுலராக அணியும் வளையல்களை மர கிளைகள் போன்ற ஸ்டாண்டைப் பயன்படுத்தலாம். அதிக விலையுடைய வளையல்கள் வேலைப்பாடுகள் உடைய கண்ணாடி, மெட்டல் வளையல்களை பெட்டிகளில் தனிதனியாக சேமித்து வைக்கலாம். இதற்காக செலவு செய்ய வேண்டும் என்றில்லை. தேவைப்படாத பெட்டியில் செய்தித்தாள், அல்லது பஞ்சுகளை பயன்படுத்தி பகுதிகளாக பிரித்து குச்சியில் வளையல்களை வைத்து பாதுகாக்கலாம். தங்க வளையல்களை இவைகளுடன் சேர்த்து வைக்க கூடாது.