Balcony (Photo Credit: Pixabay)

ஜனவரி 21, புதுடெல்லி (New Delhi): அப்பார்மெண்ட் விடுகளில் இருப்பவர்களுக்கு, பெரிய வீட்டு முற்றம், அதில் ஒரு கார்டன், அழகாக தண்ணீர் விழுந்துகொண்டே இருக்கும் வாட்டர் ஃபவுண்டெயின் இதெல்லாம் அமைப்பது கஷ்டம், ஆனால் அப்பார்மெண்ட் வீடுகளில் பால்கனி இல்லாத வீடுகளே இல்லை. உங்கள் வீட்டு பால்கனியை எல்லாரும் ரசிக்க க்கூடிய இடமாக, உங்கள் பெர்சனல் ஸ்பேஸாக மாற்ற சில டிப்ஸ்கள் இதோ.... பொதுவாக நம் வீட்டு பால்கனிகளை, பழைய பொருள்கள், தேவையில்லாத ஃபர்னிச்சர்கள், என இப்படி பல பொருள்களை வைக்க ஒரு சிறிய திறந்தவெளி குடவுன் ஆகவே பயன்படுத்தி வருகிறோம், உங்கள் வீட்டு பால்கனி சிறியதோ, பெரியதோ, இப்படி டெக்கரேட் செய்து பாருங்கள், உங்கள் வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் பால்கனியை (Balcony) விட்டு நகர மாட்டார்கள். Memes: 2கே கிட்-களின் மனதில் நின்ற வார்த்தைகள்.. பூமர் முதல் வரட்டா மாமே வரை.. சுவாரசிய தகவல் இதோ.!

ஃபர்னிச்சர் பால்கனி (Furniture balcony):

ஹால்வேயில் ஆடம்பரமான பெரிய சோஃபாக்கள், நடுவில் ஒரு காஃபி டீப்பாய், ஒரு திவான் என ஊர்ப்பட்ட ஃபர்னிச்சர்களை அடுக்கி வைத்திருப்போம். ஹால்வேயில் குறிப்பிட்ட சில முக்கியமான ஃபர்னிச்சர்களை மட்டும் வைத்து கொள்ளுங்கள். அதற்கு பதிலாக பால்கனியில், மூங்கில் சோஃபா செட், குஷன் சோஃபா செட், குஷன் சேர்கள் ஒரு பீன் பேக், ஒரு காஃபீ டேபிள் வையுங்கள். உங்கள் பால்கனிக்கு மேலும் அழகு கூட்டக்கூடிய ஒரு சக்தி, பால்கனிக்கு நீங்கள் தேர்வு செய்யும் ஃபர்னிச்சர்களிடமே உள்ளது.

பால்கனி வித் பிளாண்ட்ஸ் (Balcony with plants):

பூத்துக்குலுங்கும் பூத்தொட்டிகளுடன் ஒரு பால்கனி இருந்தால், மனதில் இருக்கும் பிரச்சனைகள், மன அழுத்தங்களை, பசுமை உணர்வின் உதவியோடு துவம்சம் செய்து விடலாம், அவ்வளவு பவர் இந்த பச்சை நிறத்துக்கு உள்ளது. பால்கனியில் ஃபர்னிச்சர்களை அரேன்ஜ் செய்த பின் உங்களின் அடுத்த டார்கெட், பிளாண்ட்ஸ். பெகோனியாஸ், கிரிசாந்தமம் (சாமந்தி), பான்ஸி, ஃபுஷியா, ஃபெர்ன்ஸ் போன்ற பூத்தொட்டிகள் வையுங்கள், இவை மனதுக்கு இதம் அளிக்கும், பின் செயற்கை புல் விரிப்பு (மோஸ் மேட்) இது பிளாஸ்டிக்கால் செய்யப்படும் ஒரு மேட், இது பார்ப்பதற்கு அசல் புல் போலவே இருக்கும், கிளீன் செய்வதும் ஈசி, உங்கள் விருப்பத்திற்கேற்ப வாரத்திற்கோ அல்லது மாதத்திற்கோ ஒரு முறை சுத்தம் செய்து கொள்ளலாம். சோஃபாவில் உக்கார்ந்து இந்த பூச்செடிகளை பார்த்து கொண்டே, கையில் ஒரு நாவலை வைத்து வாசித்து பாருங்கள் அந்த ஃபீலே வேறு.

பால்கனியில் ஊஞ்சல் (Swing on the balcony):

அழகான பொன்மாலையை, பால்கனியில் ஊஞ்சலில் உக்கார்ந்து லயிப்பது ஒரு தனி ஆனந்தம். சோஃபா, பூச்செடிகள், வரிசையில் அடுத்தது, ஊஞ்சல். பால்கனியில், ஊஞ்சல்கள், பால்கனியின் அழகை இன்னும் அதிகரிக்கும். சோஃபா கம் பால்கனி ஊஞ்சல், ஹாமோக் ஸ்டைல் ஊஞ்சல், மார்டன் சேர் பால்கனி ஊஞ்சல், கேன் ஸ்டைல் பால்கனி ஊஞ்சல், ரெட்ரோ ஸ்டைல் பால்கனி ஊஞ்சல், சிம்பில் உடன் பால்கனி ஊஞ்சல் என பல உண்டு. உங்கள் பால்கனிக்கு ஏற்ற ஊஞ்சலை நீங்கள் தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். Republic Day 2025: 76-வது இந்திய சுதந்திர தினம்: ராஜ்பாத் கொண்டாட்டம், வாழ்த்துச்செய்தி.. விபரம் இதோ.!

ஃப்லோரிங் மற்றும் வால் ஹேங்கிங் (Flooring and wall hanging):

நீங்கள் செட் செய்துவைக்கும் வால் ஹேங்கிங்கும், ஃப்லோரிங்கும் உங்கள் பால்கனிக்கு மெயின் தீம், மற்றும் ஸ்பெஷல் லுக்கும் கொடுக்கும். பால்கனிக்கு மோஸ் மேட் ஃப்லோரிங், வுடன் ஃப்லோரிங், மற்றும் வால் ஹேங்கிங், ஆகியவை, லுக்கை நன்கு சீராக்கி கொடுக்கும். வால் ஹேங்கிங்காக, மினி கலர் லைட்கள், தொங்கும் பூத்தொட்டிகள், கடைகளில் கிடைக்கக்கூடிய பிற ஹேங்கிங்களை வாங்கி வைக்கலாம், பின், படர கூடிய கொடி வகை செடிகள் தொங்க விட்டு சாயங்கால நேரங்களில் லைட்களை எரிய விட்டு, உங்கள் தனிமை நேரத்தை அங்கே செலவு செய்யுங்கள். பால்கனியை விட பெஸ்ட் பர்ஸ்னல் ஸ்பேஸ் எதுவும் இருக்க முடியாது.