ஜனவரி 21, சென்னை (Chennai): உலகத்தில் எது எப்படி நடந்தாலும் மக்களுக்கு எப்போதும் பொழுதுபோக்கிற்கு பஞ்சமே இருக்காது. அதேபோல் தமிழில் புது புது வார்த்தைகள் நகைச்சுவைக்கு உருவாக்குவது புதிதல்ல, தற்போது இணையவுலகில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும் மீம்ஸ்களில் டிரெண்டாகும் பல வார்த்தைகள், வசனங்கள் இப்போதைய இளம்தலைமுறையின் பேச்சுவழக்கில் பசை போட்டது போல் ஒட்டிக் கொண்டுள்ளது அது போன்று இணையத்தில் டிரெண்டான வார்த்தைகளைக் காணலாம்.
சீம்ஸ் வேல்ட்:
ஜப்பான் நாட்டின் சீபா இனு என்னும் நாய், அதன் முக பாவனைக்காக உலகம் முழுவதும் பிரபலமடைந்தது. இந்த நாயை வைத்து வெளிவரும் எந்த ஒரு மீமும் ரசிக்காததாக இருந்ததே இல்லை. மேலும் இது போன்ற சில நாய்களையும் சீம்ஸ், பெர்ரோ, டாகி, டாகிலோனா, வால்டர், குட்டி சீம்ஸ் என்ற பெயர்களில் அழைத்து மனிதர்களுடன் ஒப்பிட்டு மீம்ஸ் கிரியேட் செய்து வருகின்றன. அதிலும் ‘மஜா மாமே’, ‘வரட்டா மாமே டுர்ர்ர்’, ‘மண்ண போட்டு மூடிரு மாமே’ போன்ற வசனங்கள் தினமும் 2கே கிட்ஸ் வாயிலிருந்து வெளிப்படாமல் இருக்காது. வாட்ஸ் அப்பில் பலருக்கும் விருப்பமான ஸ்டிக்காராக மாறியுள்ளாள் ஷிபா இனு. சீம்ஸின் உருவத்தில் ஜோக்கர் வேடமணிந்து, ஏமாற்றம் அடைந்தது போன்ற கன்டண்டை நகைச்சுவையாக வெளிப்படுத்தும் விதத்தில் ஜோக்கர் மீ, க்ளௌன் மீ, அப்போ நான் தான் ஜோக்கரா என்ற வார்த்தையை பயன்படுத்தி மீம்ஸ்கள் இணையத்தில் பரவி வருகின்றது. இளம் தலைமுறை ஏமாற்றத்தைகூட நகைச்சுவையாக கடந்து செல்கின்றனர் தினம் தினம். நகைச்சுவையாக கோபப்படுவதற்கு ‘டிரிகர்ட்’ வார்த்தையும் பிரபலம். Carrot Chips Recipe: மொறு மொறுன்னு கேரட் சிப்ஸ் செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!
உருட்டு, வன்மம்:
மீம்ஸ் பற்றி அவ்வளவாக தெரியாதவர்களுக்கு கூட இவ்விரண்டு வார்த்தைகளும் தெரிந்திருக்கும். சூரியா, விக்கரமின் நடிப்பில் வெளிவந்த பிதாமகன் திரைப்படத்தில் ஒரு குறிபிட்ட காட்சியில் தெருவோர சூதாட்ட விளையாட்டின் போது மனோபாலா ‘நீ உருட்டு மா உன் நல்ல மனசுக்கு நல்லது தான் நடக்கும்’ எனக் கூறுவார். இது என்றோ வந்த மூவி ஆனாலும் இன்று டிரெண்டில் உள்ளது. பொய் கூறுபவரை, சமாளிக்க சாக்கு செல்பவர்களை செல்வதற்கு தற்போது பயன்படுகிறது.
வன்மம் ஆழ்ந்து அற்தம் புரிந்து பார்த்தால் டெரராக உள்ளது. முன்பெல்லாம் நீ ஒரு வன்மவாதி என்று யாரவது கூறினால், அவர்களின் தலையைத் துண்டாக்கும் அளவிற்கு கோவம் வரும். ஆனால் இப்போது யாரேனும் சொன்னால் சிரிப்புதான் வருகிறது. ஏனெனில் நம்மூர் எம்சிஸ் அவ்வளவு வன்மத்தை உள்ள வச்சுருக்க என்று கிடைத்த கேப்பில் தன்னை கலாய்த்த நண்பனை திருப்பி கலாய்க்க பயன்படுத்தி வன்ம உணர்வின் அர்த்தத்தையே மாற்றிவிட்டனர்.
பூமர், கிரிஞ்:
பழைய சம்பர்ந்தாயங்களையும் மூடநம்பிக்கையையும் மாற்றாமல் இன்னும் அவற்றை ஃபாலோ செய்து வருபவர்களை பூமர் என்று அழைக்கிறார்கள். உதாரணமாக பெண்களை இதெல்லாம் செய்யக்கூடாது, இது அனைவருக்கும் சம உரிமை அளிக்காதவர்கள் ஆகியோரை கலாய்ப்பதற்காக இந்த வார்தையை பயன்படுத்துகின்றனர் இக்காலத்தவர். இதிலும் சிறு வயதில் பழமைகளை பேசுபவர்களை யங் பூமர் என்று கலாய்க்கின்றனர். யூடியூபர்ஸ் கோபி சுதாகரின் டயலாக்கான பூமர் அங்கிள், பூமர் ஆண்டி வார்த்தைகளையும் எக்ஸ்ராவாக சேர்த்துக் கொள்கின்றனர். இவர்களின் ‘கோட் வேர்ட் அக்சப்டர்ட்’ வசனமும் நண்பர்கள் உரையாடுகையில் அடிக்கடி தட்டுப்படும் வார்த்தை தான். Vastu Tips: வீடு கட்டப்போறீங்களா? எந்த திசையில் எந்த அறைகள் இருக்க வேண்டும்? வாங்க தெரிஞ்சிக்கலாம்.!
கிரிஞ் வார்த்தை அடுத்தவர்கள் முன் க்யூட் என நினைத்து செய்யும் ஓவர் ரியாக்ஷன் செய்பவர்களை அழைக்கும் வார்த்தையாக உள்ளது. பெரிய பெரிய ஹீரோக்களைக் கூட கிரிஞ் என செல்லி கலாய்த்து தள்ளுகின்றனர். சிவகார்த்திக்கேயன் பெயர் கூட மீம் லாங்குவேஜில் கிரிஞ்சாண்டி தான்.
முத்துவின் மொழி:
வடிவேலு எப்படி மதுரை மொழியை நகைச்சுவையால் தமிழகம் முழுதும் பரப்பினாரோ அது போல தற்போது யூடியூப் பிரபலமான G.P முத்து அவரின் நெல்லை மொழியும் மக்களிடம் பிரபலமடைந்தது. அதிலும் குறிப்பாக ‘நக்கு’, ‘செத்தபயலே’, ‘பேதில போவான்’ போன்ற வார்த்தைகள் அன்றாடம் இளசுகளின் வாயில் ஒலித்துவிடுகிறது முத்துவின் மாடுலேசனில்.
ஜாயிண்ட் ஜெகதீஷன்:
இயக்குநர் மற்றும் நடிகருமான பிரதீப் ரங்கனாதன் ரஜினியை வைத்து அடுத்த படம் இயக்குவதாக ரூமர்கள் வெளிவந்தது இதை கலாய்க்கும் விதமாக மீமர்கள் பிரதீப் இயக்கினால் இவ்வாறு இருக்கும் என கற்பனையாக பல கதைகளை கட்டி படத்திற்கு ‘ஜாயிண்ட் ஜெகதீசன்’ என பெயரும் வைத்துவிட்டனர் படத்தின் பெயரும் டிரெண்டாகி விட்டது. இதற்கு கிடைத்து ஃபேன் பேஷை பார்க்கையில் சூப்பர்ஸ்டார் ஓகே செல்லிவிடுவார் போலயே…
குபீர்,டோலன், டோலி:
இது போன்ற வார்த்தைகள் தினமும் பயன்படுத்தும் வார்த்தையாக பழகிவிட்டது. குபீர் என்பது அடக்கமுடியாமல் வெளிபடும் ஒன்று. யாராவது அல்டிமேட்டாக நகைச்சுவை செய்கையில் குபீர் என்று பயன்படுத்துகின்றர். உணர்வு வெளிப்பாட்டிற்கும் பெயர் வைத்துள்ளனர். நண்பர்கள் தங்களை வெளிப்படையாக அடையாளப்படுத்திக் கொள்ள மாட்டார்கள். ஆனால் இதை நகைச்சுவையாக சொல்கின்றனர். டோலன் என்பதை கூட அதிகமாக பயன்படுத்துவதில்லை. ஆனால் நம்ம வாலிபர்கள் ‘டோலி இல்லையே’ என்று மிகவும் வருத்தப்படுகின்றனர் மீம்ஸில்.
அரசியல்:
தலைமுறை மாறினாலும் தமிழக மக்களுக்கு அரசியல் பேச்சுகள் என்றாலே பிடிக்கும். டி கடையில் பேசி கொண்டிருந்த நக்கல் பேச்சுகள் இன்று இணையத்திலும் நிற்கவில்லை. ஒரு ஒரு கட்சியை தரமாக செய்து வருகின்றனர் நமது மீமர்கள். Care for Your Bangles: வளையல்களை பொலிவு மங்காமல் பராமரிப்பது எப்படி? அசத்தல் டிப்ஸ் இதோ.!
சங்கி:
தமிழக மக்கள் அனைவருக்கும் பிடித்த வார்த்தையாக உள்ளது இந்த சங்கி. பிஜேபியையும் அதன் தொண்டர்களையும் சங்கிகள் என்று அழைக்கின்றனர். மேலும் மதவாதிகளையும் சங்கிகள் என்று தான் குறிப்பிடுகின்றனர். இது இந்து, முஸ்லீம் பாகுபாடெல்லாம் இல்லை மதவாதியா அப்ப சங்கி தான் அவ்வளவு தான் இளசுகளிடம். இதனால் இன்றை தலைமுறைகள் சற்று விழிப்புணர்வுடனேயே இருக்கின்றனர். சாமியை கும்பிடவேண்டுமா இல்லை மதத்தை கும்பிட வேண்டுமா என்று. (நார்த்தீகவாதியா நீங்கள் அடுத்த பத்திக்கு தாவிவிடுங்கள் )
உபி, ரொம்ப தவறுங்க:
எம்சிக்கு ஆளும் கட்சி எதிர்கட்சி என்றெல்லாம் தெரியாது. யாராக இருந்தாலும் கலாய்தான். திமுக தலைவர் ஸ்டாலின் தனது தொண்டர்களை உடன்பிறப்புகளே என்று அடிக்கடி அழைப்பதுண்டு. அதனால் ஏதேனும் புதிதாக அறிவிப்புகள் திமுகவில் வெளியானால் உபிஸ் என்று குறிப்பிட்டு கலாய்ப்பார்கள். இவரின் ‘ஆக பதவி விலக வேண்டும்’ டயலாகும் பிரபலம் தான். அதேபோல் இபிஸ் சொன்ன, இதெல்லாம் ரொம்ப தவறுங்க டயலாகும் தினமும் பயன்படுத்தும் டயலாகிறது.
கன்னி, அணில், ஆமை:
கன்னி என்னும் வார்த்தை ரசிகர் என்ற வார்த்தைக்கு மாற்றாக வந்துள்ளது மீம் லாங்குவேஜில். நீங்கள் எதன் கன்னி என கமெண்டில் குறிப்பிடுங்கள். அணில், ஆமை வார்த்தைகள் பற்றி அறியாதவர்களே இல்லை. விஜயும் விஜய்யின் ரசிகர்களை அணில் என்றும், அஜித் அஜித்தின் ரசிகர்களை ஆமை என்றும் குறிப்பிடுகின்றனர். வால் தெரியுது ப்ரோ, ஓடா மற ப்ரோ என்ற மாறி மாறி நகைச்சுவையாக சண்டையிடுகின்றனர். நான் அணிலாமை அப்போ நீங்க?
பங்காலீஸ்:
விளையாட்டுத்துறையையும் விட்டு வைக்கவில்லை. சிஎஸ்கே ரசிகர்களை மஞ்ச மாக்கான்ஸ் என்றும், மும்பை இண்டியன்ஸ் டீமை கடப்பாரை டீம் என்றும் குறிப்பிட்டு கலாய்க்கிறார்கள். இரு டீமும் ஒன்றாக தோற்கையில் பங்காலீ ஆகி விடுகிறார்கள்.
பதிலுக்கு பதில்:
ஆபாசமாக வீடியோ செய்து இணையத்தில் பதிவிடும் பெண்களை ’துப்பட்டா போடுங்க டோலி’ என்று பணிவுடன் கலாய்க்கிறார்கள். அவர்களின் உரிமையில் நீங்கள் தலையீடாதீர்கள் ‘கலாச்சார காவலர்களே’ என்று பதிலடியும் நகைச்சுவையாக தருகிறார்கள்.
இது போன்ற நகைச்சுவையெல்லாம் புரியாதவர்களை ஹூமர் தெரியாத பூமர் என்று சொல்லிவிடுகின்றனர். நீங்கள் எப்படி?