Sunscreen (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 18, சென்னை (Chennai News): பனிக்காலம் முடிந்து கோடைக் காலம் ஆரம்பித்திருப்பதால் சருமத்தில் உண்டான சுருக்கம் பனி வெடிப்பு போன்றவை இயற்கையாகவே சரியாகும் அதேசமயம் தோலில் நிறம் கருமையாகவும், வறட்சியாகவும் மாறும். அதிலும் தினமும் வேலைக்கு செல்பவர்களாக இருப்பின் அவர்களின் தோல் அதிகம் பாதிப்படையும். அதனால் தான்கோடை காலத்தில் சருமத்தை சன் ஸ்கிரீன் கொண்டு பாதுகாக்க வேண்டும்.

கோடைகாலத்தில் சூரியனிலிருந்து வெளிவரும் அல்ட்ரா வயலட் கதிர்கள் கோடைகாலத்தில் அதிகம் இருப்பதால் மற்ற காலத்தைவிட கோடைகாலத்தில் சருமம் அதிகம் பாதிப்பிற்குள்ளாகும். மேலும் விரைவில் சரும சுருக்கங்களையும் ஏற்படுத்தும். காலை 10 மணி முதல் 4 மணி வரை வெளியில் செல்பவர்கள் சன்ஸ்கீரீனைப் பயன்படுத்த வேண்டும். சன் ஸ்கிரீன் பல வகைகளில் கிடைக்கிறது. அவரவரின் சருமத் தன்மைக்கேற்பவும், திறன்களையும் கவனித்து சன் ஸ்கிரீன்களை தேர்வு செய்ய வேண்டும். அதுவே நல்ல பலனை அளிக்கும். Ice Bath: பிரபலங்களின் ஐஸ் பாத்.. எவ்வாறு ஐஸ்ஸில் குளிப்பது? தவிர்க்க வேண்டியவர்கள் யார்? விபரம் உள்ளே.!

SPF

முதலில் கவனிக்க வேண்டியது வாங்கப்போகும் சன் ஸ்கீரின் எவ்வளவு மணி நேரம் சருமத்திற்கு பாதுகாப்பைத் தரும் என கவனிக்க வேண்டும். மேலும் சன் ஸ்கிரீனில் சன் புரொட்டெக்‌ஷன் ஃபெக்டர் (sun protection factor spf) எண்களை கவனித்து பாதுகப்புக் கொடுக்கும் நிமிடங்களை கணக்கிட்டு, தேவைக்கேற்ப வாங்க வேண்டும். சில சன்ஸ்கிரீன்களில் SPF PA +++ என்று குறிப்பிட்டிருந்தால், அது அல்ட்ரா வயலட் கதிர் ‘ஏ’-ல் இருந்து பாதுகாப்பைக் கொடுக்கும். சூரியனிலிருந்து வெளிவரும் மூன்று கதிர்களான ஏ,பி,சி கதிர்கள் சருமத்தில் பாதிப்புகளை ஏற்படுத்த கூடியது. மேலும் டைடானியம் டையாக்ஸைடு மற்றும் சின்க் ஆக்ஸைடு சன் ஸ்கிரீனில் பாதுகாப்பா இன்கிரிடியண்டுகள் ஆகும். இவைகள் இருந்தால் அந்த பிராண்ட் சன்ஸ்கீரினைப் பயன்படுத்தலாம்.

சன்ஸ்கீரினை தேர்தெடுக்கும் முன் சருமத்தின் தன்மை பற்றி அறிந்திருக்க வேண்டும். வறட்சியான சருமம் உடையவர்கள் எண்ணெய் கலந்த SPF பயன்படுத்தலாம். எண்ணெய் பசை சருமம் உடையவர்கள் ஜெல், மேட்ஃபினிஷில் கிடைக்ககூடிய சன்ஸ்கிரீன்களை தேர்ந்தெடுக்கலாம். எந்த வகை சருமம் உடையவராக இருந்தாலும் சஸ்கிரீனைப் பயன்படுத்துவது நன்மை பயக்கும். சன்ஸ்கிரீம்கள் கிரீம், லோசன், ஃபவுண்டேஷன்களிலும் கிடைக்கிறது. இவைகளில் தேவையைப் பொருத்து வாங்கிக் கொள்ளலாம். மேலும் அதன் குவாலிட்டியையையும் பார்த்து வாங்க வேண்டும். முடிந்தவரை பிராண்ட் சன்ஸ்கிரீன்களை வாங்கவும்.

சன்ஸ்கிரீமை பயன்படுத்தியவுடனே வெளியில் செல்லக்கூடாது. கிரீமை சருமம் அப்சர்வ் செய்வதற்காக குறைந்தபட்சம் 15 நிமிடம் அப்ளை செய்த பின்பே வெளியில் செல்ல வேண்டும். மற்றும் சன்ஸ்கிரீம்கள் போட்டவுடன் பவுடர், ஃபவுண்டேஷனை அப்ளே செய்யாமல் 10 நிமிடத்திற்கு பிறகு அப்ளே செய்து கொள்ளலாம். முகம் மட்டுமல்லாமல் கை, கால் கழுத்து பகுதிகளிலும் சன்ஸ்கிரீமை அப்ளை செய்ய வேண்டும். கண்களுக்கு கீழ், கழுத்து போன்ற மென்மையான பகுதிகளில் மசாஜ் செய்வது போன்று அப்ளை செய்ய வேண்டும். மேலும் காலை அப்ளை செய்தது மாலையும் அதுவே இருக்கும் என நினைக்க கூடாது. மத்தியமோ அல்லது மாலையோ, முகத்தை கழுவிவிட்டு மீண்டும் அப்ளை செய்து கொள்ள வேண்டும்.