Winter Face Problems (Photo Credit: Pixabay)

ஜனவரி 23, புதுடெல்லி (Beauty Tips): மாசுக்கள் மற்றும் உடல்நலத்தால் இழந்த சருமத்தின் பொலிவை மீட்டெடுப்பதில் ஸ்பெசலிஸ்டாக இருப்பது ஒயின். திரட்சைப் பழத்தை புளிக்க வைத்து, பதப்படுத்தி தயாரிக்கபடும் ஒயினில் செய்யும் பேஷியல் பெண்களிடையே பிரபலமாக இருந்து வருகிறது. ஒயினில் உள்ள ஆன்டி-ஆக்சிடெண்டுகள் சருமத்தில் சுருக்கங்கள் வராமல் இளமையாகவே வைத்துக் கொள்ள உதவுகிறது. குறிப்பாக சிவப்பு ஒயின்கள் சருமத்தில் ஏற்படும் சோர்வை நீக்கி, நீரேற்றமாக வைத்திருக்கும். மேலும் சருமத்தில் நச்சுகளை நீக்கி, நிறத்தையும் மேம்படுத்துகிறது.பார்லர் மற்றும் ஸ்பாக்களில் இந்த ஒயின் பேஷியல், ஒயின் டிரீட்மெண்ட் போன்றவைகள் அளிகப்படுகிறது. இதை தவிர வீட்டிலேயே சுலபமாக ஒயின் பேஷியல் செய்து கொள்ள முடியும். Mealmaker Varuval Recipe: அட்டகாசமான சுவையில் மீல்மேக்கர் வறுவல் செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!

ஒயின் ஃபேஷியல் செய்யும் முறை:

  • ஒரு டேபிள் ஸ்பூன் சிவப்பு ஒயினுடன், சமஅளவு எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதை முகம் முழுவதும் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.
  • ஒரு டீஸ்பூன் அரிசி மாவுடன் 2 டீஸ்பூன் சிவப்பு ஒயின் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். முகத்தை தண்ணீரில் ஈரப்படுத்த வேண்டும். பின் இந்தக் கலவையை முகத்தில் தடவி, 5 நிமிடத்திற்கு மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
  • பின், சற்று சூடான தண்ணீரில் சுத்தமான மிருதுவாக இருக்கும் துண்டை நனைத்து, முகத்தின் மேல் மூடி 5 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். இதனால் சருமத்தின் துளைகள் திறக்கும்.
  • பின் ஒரு டேபிள் ஸ்பூன் சிவப்பு ஒயின், ஒரு டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் இரண்டையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதை முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். பின்பு வெதுவெதுப்பான தண்ணீரில் நனைத்த டவலைக் கொண்டு முகத்தை துடைத்தெடுக்க வேண்டும்.
  • பிறகு, ஒரு ஸ்பூன் சிவப்பு ஒயின், சமஅளவு தயிர், அரை ஸ்பூன் தேன் ஆகியவைகளை கலந்து பேஸ்டா எடுக்க வேண்டும். இதை முகம் முழுவதும் பிரஷ் கொண்டு சீராகத் தடவ வேண்டும். இதை 10 முதல் 15 நிமிடங்களுக்கு பின்பு குளிர்ந்த தண்ணீரைக் கொண்டு முகத்தைக் கழுவ விட வேண்டும்.
  • இவை அனைத்திற்குப் பின்பும், ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர், ஒரு ஸ்பூன் சிவப்பு ஒயின் சேர்த்து கலக்கி அதை முகம் முழுவதும் தடவி 10 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் முகத்தைக் கழுவ வேண்டும். பின் 10 நிமிடத்திற்கு முகத்தை தொடமலும் துசிகள் படாதவாறும் இருக்க வேண்டும்.
  • இதை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை செய்து வரலாம். சருமத்தின் நிறத்தை அதிகரிக்கவும் பொலிவையும் தரும்.