
மார்ச் 06, சென்னை (Technology News): ஓய்வுக் காலத்திற்கான முதலீட்டை பணியில் சேர்ந்ததிலிருந்தே சேமிக்க வேண்டும். இல்லையெனினும் முடிந்த அளவிற்கு விரைவாக முதலீட்டை மேற்கொள்ள வேண்டும். பலருக்கும் இதன் அவசியமும் தேவையும் தெரிவதில்லை. சம்பாதிக்கும் காலம் முழுவதும் சேமிப்பை மேற்கொள்ளாமல் அந்தந்த நிதி சூழ்நிலைக்கு ஏற்ப மட்டுமே வாழ்ந்து வருகிறார்கள். இளமை விட முதுமையிலேயே வறுமை கொடியது என்பதை நினைவில் வைத்து முதலீட்டை மேற்கொள்ளுங்கள்.
வயதான ஓய்வுகாலத்தில் மற்ற செலவுகளுடன், மருத்துவ செலவுகளும் அதிகரிக்கும். அந்த நேரத்தில் பணியில் இல்லாமல் இருந்தாலும், வயதாகும் காரணத்தாலும் மற்றவர்கள் கடனாக பணம் தர தயங்குவார்கள். அவசர மருத்துவ செலவுகள் ஏற்படும் காலத்தில் நிதி நெருக்கடிக்குத் தள்ளப்படுவர். இவைகளை ஓய்வுகாலத்தில் தன்னம்பிக்கையுடன் நிதிகளை சமாளிக்க, மருத்துவ செலவுகளுக்காக தனியாக காப்பீடு, தேவைகளுக்கான சேமிப்பில் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். வயதான காலத்தில் எந்த ஒரு நிதி இடையூறு இல்லாத முதுமை காலத்தை அமைதியாக செலவிட வேண்டும். Tips For Selling Your Home: வீடு வாங்குவதை விட விற்பதில் சிரமமா? உடனடியாக வீட்டை விற்க என்ன செய்யலாம்..!
வழக்கமான மருத்துவத்திற்கு செலவு செய்யும் தொகையைப் போல ஆறு மாதச் செலவுகளை எப்போதும் அவசரகால தேவைக்காக என்று சேமித்து வைத்துக் கொள்வது மிக அவசியம். இந்த கணக்கை வருடங்களுக்கு வருடம் அதிகப்படுத்த வேண்டும். 6 மாதத்தை, 8 மாதம் 10 மாதம் 12 மாதம் என அதிகரிக்க வேண்டும். மேலும் இந்த தொகையை மருத்துவத்திற்கு பயன்படுத்துவதை தவிர வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது. இத்தொகை அவசரத்திற்கு எடுத்துப் பயன்படுத்தும் வகையில், ஏ.டி.எம் வசதி உள்ள சேமிப்புக் கணக்கு, ரிஸ்க் இல்லாத லிக்விட் மியூச்சுவல் ஃபண்ட் ஆகியவற்றில் வைத்துக் கொள்ள வேண்டும்.
60 வயது ஓய்வு காலத்திற்கு பிறகு குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் வாழ்வதற்கான நிதியை வைத்துக் கொள்ள வேண்டும். அதிலும் மருத்துவத் துறையின் முன்னேற்றத்தால் புதிய நோய்களும் மருந்துகளும் வந்து கொண்டே தான் உள்ளது. இதனால் மருத்துவ செலவுகளும் ஆய்வுகளும் அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது. எதிர்காலத்தில் இன்னும் அதிகமாக நிதி தேவை ஏற்படும். இதனால் அதிக நிதிநிலை இல்லை எனில், முதுமையான நாட்களில் மிகவும் சிக்கனமாக செலவு செய்து வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்படும். பிறகு தங்கள் குழந்தைகளுக்கு மருத்துவ செலவு செய்வது பாரமாகி விடும். அவர்களும் அவர்களின் எதிர்காலத்திற்கு சேமிக்க வேண்டும்.
ஓய்வு கால சேமிப்பிற்கு சேமிப்பதை போலவே விரைவான பணி ஓய்வும் பெறுவதும் கட்டாயம். அப்போது தான் இலக்கு வைத்து சேமிக்க முடியும். மேலும் வயதாக வயதாக சுமைகளும் அதிகமாகும். அவைகளுக்கும் நிதி தேவையை ஏற்படும். இவைகளை கவனித்துக் கொள்வதற்காகவே 55 முதல் 65 ஓய்வு பெறும் வயது என நிர்ணயித்துக் கொள்ளுங்கள். முன்கூட்டியே பணி ஓய்வு என்பது, அவர்களாக விருப்பப்பட்டு பணி ஓய்வு பெறுவது மற்றும் நிறுவனமே முன் கூட்டியே பணி ஓய்வு கொடுப்பது என இரண்டு வகையாக உள்ளது. இந்த இரு நிலைகளுக்கும், 45 முதல் 50 வயதில் தயாராக இருக்க வேண்டும். இதற்கு பின் சுய தொழில் செய்யலாமா, வருங்காலத்திற்கு தேவையான பணம் வைத்துள்ளோமா என சிந்தித்து செயல் பட வேண்டும். ஓய்வு காலத்தில் தங்களால் முடிந்த சுயதொழில் செய்யும் அளவிற்கு ஏதேனு ஒன்றில் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மருத்துவக் காப்பீடு:
எதிர்காலத்தில் மருத்துவ செலவுகள் நாம் கணக்கிட்டு சேமித்து வைக்கும் அளவை விட பெரியதாக வர வாய்ப்புள்ளது. மருத்துவ சேமிப்புகளுடன், முடிந்த அளவு அதிக தொகைக்கு மருத்துவ காப்பீட்டை எடுத்துக் கொள்ள வேண்டும். மருத்துவ காப்பீடு ஓய்வு காலத்திற்கு மட்டுமல்லாமல் அனைத்து காலத்திற்கும் உதவுவதாகும். மருத்துவக் காப்பீட்டை, குடும்பத்தின் மருத்துவ வரலாறு, ஏற்கனவே இருக்கும் நோய்கள், தற்போது இருக்கும் சிகிச்சை செலவை விட இருமடங்கு அதிக தொகை என அனைத்தையும் கணக்கிட்டு மருத்துவ காப்பீடு எடுப்பது அவசியமாகும். பாலிசியில் கோர முடியாத இழப்பீடு மற்றும் தொடர்ச்சியான மருத்துவ செலவுகளுக்கு தனி சேமிப்பு அவசியம்.
ஓய்வூதியத்திற்கான தொகையை பிரித்து முதலீடு செய்ய வேண்டும். ஓய்வூ காலத்திற்காக காப்பீடு, தங்கள், மியூச்சுவல் ஃபண்ட், நிலம், என தனித்தனியாக சொத்துக்களாக சேமித்து வைக்க வேண்டும். இது வயதான காலத்தில் நிம்மதியான ஓய்வுக்காலமாக மாற உதவும். பணத்தை உபயோகமின்றி வங்கிகளில் வீடுகளில் சேமித்து வைக்காமல் செல்வமாக வளரும் விதத்தில் பயன்படுத்த வேண்டும். முதலீடுகள் அதிகமாக செய்ய செய்ய ஓய்வுகாலம் பாதுகாக்கப்படும். மேலும் ஓய்வூதிய தொகுப்பு நிதியை ரிஸ்க் குறைவான திட்டங்களில் முதலீடு செய்து வைக்கலாம். ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு மாற்றி வைக்கலாம்.
ஓய்வுகாலத்திற்காக இளம் வயதிலேயே முன்கூடிய கவனமாக பணத்தைக் கையாளவேண்டும். முடிந்த வரை செலவுகளை குறைத்து சேமிப்பிலும், முதலீட்டுலும் இறங்க வேண்டும். சரியானவழிமுரைகளும் கணக்கிடுதலும் இருந்தால் ஓய்வுகாலம் நிம்மதியாக இருக்கும்.